வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய் Phoenix, Arizona, USA 64-0125 1சரி. இதுதானா .......... (ஒரு சகோதரன், “இது உங்களுடைய மின்சார ஒலிபெருக்கி” என்கிறார். - ஆசி.) இதுதான் முக்கியமான ஒன்றா? ஐயா, உங்களுக்கு நன்றி. (“இது இயங்கும் மின்சார ஒலி பெருக்கி”] ஆம் ஐயா. சரி. அங்கு பின்னால் அவர்கள் சற்று எதிரொலியையே கேட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன், எனவே ......... காலை வணக்கம், நண்பர்களே . அங்கே பின்னால் உள்ள உங்களால் நான் பேசுவதை சரியாய் கேட்க முடிகிறதா? (சபையோர், ''ஆம்'' என்கின்றனர்.) அது. இதனை நிறுத்திவிட்டது. உங்களுக்கு நன்றி. 2நாம் இந்தக் காலையில் மகிழ்ந்து கொண்டிருக்கையில், இப்படிப்பட்ட மிகச்சிறப்பான சாட்சிகள் கொடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் கூறியிருக்கின்றதற்கு சற்று கூடுதலாக கூற முயற்சிக்கவும், நமக்கு ஆசீர்வாதங்களை கொண்டு வரும்படியாக இந்தக் காலை இங்கே இந்த மேடைக்கு வருவதற்கு நான் நிச்சயமாகவே சிலாக்கியம் பெற்ற ஒரு நபராய் இருக்கிறேன். இப்பொழுது நான் அவர்களில் சிலர் மிகவும் ........ கவனித்தேன். ஒலிபெருக்கி கருவி ஒரு சத்தத்தை எதிர் முழக்க மிடுகிறது. ஒரு சகோதரன், “சகோதரன் பிரான்ஹாம், நாம் இதை மையத்தில் வைக்க வேண்டும் என்று கருதுகிறேன்'' என்கிறார். - ஆசி.) சரி ஐயா. அது நன்றாய் இருக்கிறதா? இங்கிருந்த மனிதர் சிலர், அவர்கள் எப்படி பேசினர், பெரும்பாலும் ஒவ்வொருவருமே ...... நல்லது, இங்கிருந்த ஒவ்வொருவரும் உண்மையாகவே ஒரு பிரகாசமான, சிறப்பான சாட்சியை உடையவர்களாயிருந்தனர். கர்த்தருக்கான அந்த அருமையான சாட்சியை, அதை நான் எவ்வளவாய் பாராட்டுகிறேன்! இப்பொழுது நாம் வார்த்தையை அணுகப்போகிறோம். நான், இந்த வாரம், ஜனங்கள் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் அமர்ந்து எனக்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கும்படி காக்க வைக்கமாட்டேன் என்று என் இருதயத்தில் நான் தீர்மானித்திருக்கிறேன். நண்பர்களே, நான் - நான் ஏன் அதைச் செய் கி றேன் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நான் கல்வியறிவற்றவன், நான் ஆவியின் ஏவுதலினால் மட்டுமே பேச முடியும். இப்பொழுது, கல்வி கற்ற ஒரு மனிதன், அவனும் கூட ஏவப்படுகிறபோது, அவன் தன்னுடைய கல் வி யினால் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை அவனால் விளக்கிக் கூறமுடியும், மேலும் அவன் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ளும் படியான வார்த்தைகளில் விளக்கிக் கூறமுடியும். கல்வியறிவு இல்லாதபடியால் நான் இயற்கையின் அடையாளங்களை எடுத்து, எனக்கு உண்டாகின்ற' ஏவுதலின் மூலமாக அதை எடுத்துரைக்க வேண்டியதாயிருக்கிறது. அது சில நேரங்களில், உண்மையிலேயே ஜனங்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. தேவன் அதேவிதமாக, அதே வழிகளில் அதைச் செய்தார் என்பதை நான் வேதாகமத்தில் கண்டறியும் வரையில் அதைக் குறித்து நான் மிகவும் கலக்கமடைந்திருந்தேன் என்பதை நாம் அறிவோம். 3நாம் யோவான் ஸ் நான கனை கவனிப்போம். அவனுடைய கல்வியைக் குறித்த ஆதாரச்சான்று ஏதும் நம்மிடத்தில் இல்லை. ஆகையால் அவன்-அவன் வனாந்திரத் திலிருந்து வெளியே வந்தபோது, அவன் தன்னுடைய சபையாரிடத்தில், அந்நாளின் சபையினிடத்தில் ....... பேசத் து வங் கினான். அவன் எப்படி ஒப்புவமை மூலம் உருப்படுத்திக் காட்டினான் என்பதை நாம் கவனிப்போம். அவன், “நீங்கள் பாம்புகளின் சந்ததி” என்றான். பாருங்கள், அதைத்தான் அவன் வழக்கமாக இயற்கையில், வனாந்திரத்தில் அறிந்திருந்தான். வேறு வார்த்தைகளில் கூறினால் வழுவழுப்பான, வழுக்கலான, வஞ்சிக்கிற ஒன்று என்பதாகும். இப்பொழுது, வேறு மனிதனாய் இருந்திருந்தால் வேறு ஏதோ வார்த்தையைக் கொண்டு, “எத்தர்கள்” என்று கூறியிருப்பான். வார்த்தை அல்லது அவன் வேறு ஏதோ வார்த்தையைப் பயன்படுத்தி அதை எடுத்துரைத்திருக்க முடிந்திருக்கும். ஆனால் யோவான் “பாம்பு” என்ற வார்த்தையையே பயன்படுத்தினான். எல்லோருமே அவன் எதைக் குறித்துப் பேசினான் என்பதை புரிந்து கொண்டனர் என்று நான் கருதுகிறேன். எனவே அப்பொழுது அவன், “நாங்கள் இதைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அதைச் சேர்ந்தவர்கள் என்று உங்களுக்குள் ளே சொல்லிக் கொள்ள நினைக்கத் து வாங்காதீர்கள்,'' ஏ னென்றால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தேவன் இந்த கல்லுகளினாலே பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்”. பாருங்கள், பாருங்கள்“ மற்ற ஏதோ மகத்தான ஒன்றினால் அல்ல. ”தேவன் இந்தக் கல்லுகளினாலே பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவரா யிருக்கிறார்'' என்றான். அவன் அதை இயற்கையில் ஒப்புவமை மூலம் உருப்படுத்திக் காட்டினான். மேலும் “கோடரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப் பட்டிருக்கிறது” என்றும் கூட கூறினான். ஆனால் ஒரு நல்ல கல்வி கற்ற சகோதரன் அதே ஏவுதலினால், “அவர் நிர்மூலமாக்கி விடுவார்'' என்று கூறியிருப்பான். அவனோ, ”கோடரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது“ என்றான். எப்படியோ அது இதனை நிர்மூலமாக்குகிறது. பாருங்கள், எனவே அவன் - அவன் அதுதான் அது என்பதை அறிந்திருந்தான். அவன் வெறுமனே அந்த விதமான சொற்றொடர்களையே கூறிவந்தான், ஏனென்றால் ஒருவேளை அவன் எந்தப் பள்ளிக்குமே சென்றிருந்திருக்கமாட்டான். நாம் நம்முடைய தலை களை சற்று நேரம் வணங்குவோமாக. இங்கே எனக்கு ஜெபத்திற்கான வேண்டுகோள்கள் உள்ளன. வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதே என்னுடைய ஊழியமாய் உள்ளது. இங்கு நான் சில வேண்டுகோள்களை பெற்றுள்ளேன். சில மிகவும் கவனிக்க வேண்டிய வேண்டும் கோள்களாய் இருக்கின்றன. இங்கே அநேகர் இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். இந்தக் காலையில் யாராகிலும் ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டுமென்று விரும்பு கின்றீர்களா? நல்லது, நீங்கள் அப்படியே உங்களுடைய கரங்களை தேவனண்டை உயர்த்தி , “என்னை ........'' என்று கூறுவீர்களானால் நலமாயிருக்கும். இப்பொழுது நாங்கள் ஜெபிக்கையில் உங்களுடைய வேண்டுகோள்களை கவனமாய் பற்றிக் கொண்டிருங்கள். 4எங்கள் பர லோகப் பிதாவே, ஒவ்வொருவரும் தங்களுடைய வேண்டுகோள்களை எழுதிக் கொடுத்திருக் கின்றனர். இங்கு நான் அதை என்னுடைய கரத்தில் வைத்திருக்கிறேன், இப்பொழுது நாங்கள் இந்த விண்ணப்பத்திற்கு வேண்டிக்கொள்ளும்படியாய் கர்த்தராகிய இயேசுவாகிய உம்முடைய பரிசுத்த பிள்ளையின் நாமத்தின் மூலம் உம்முடைய பரிசுத்தத்தை அணுகிக் கொண்டிருக் கிறோம். விசேஷமாக இந்த சகோதரனுடைய வாலிபமான, அழகான குமாரத்தி அந்த விபத்தில் சின்னாபின்னமாக்கப் பட்டிருக்கிறாள். கர்த்தாவே நான் அந்த பிள்ளைக்காக ஜெபிக்கிறேன். நான் மற்ற எல்லா வேண்டுகோள்களுக் காகவும் ஜெபிக்கிறேன். இப்பொழுது எங்களுக்கு இரகசியமாய் இருக்கிறவைகளுக்காகவும், தங்களுடைய கரத்தை உயர்த்தினவர்களுக்காகவும் ஜெபிக்கிறேன். ஆனால் நீர் எல்லையற்ற தேவனாய் இருக்கிறீர். நீர் எங்கள் எல்லோருடைய வேண்டுகோள்களையும், ஒவ்வொருவரின் உள்ளெண்ணத்தையும் அறிந்திருக்கிறீர். நீர் பதிலளிப்பீர் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். நீர் அதை வாக்களித் திருக்கிறபடியால் நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் உம்பேரில் காத்திருக்கையில், நாங்கள் வாசிக்க இருக்கின்ற இந்த சில வார்த்தைகளை நீர் எடுத்து, அவைகளைக் கொண்டு எங்களுக்கு தெய்வீக ஊக்கமளிக்குமாறு இப்பொழுது நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து, வார்த்தையின் வியாக்கியானத்தை எங்களுக்கு வெளிப்படுத்துவாராக. ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 5(ஒலி பெருக்கியைக் குறித்து ஒரு சகோதரன் , “சகோதரன், பிரான் ஹாம், அது இயங்குமா என்று பார்க்கும் படி நாம் ஒரு பரிசோதனை செய்யலாமா?'' என்கிறார். - ஆசி.) ஆம் ஐயா, சகோதரனே, நீங்களே அப்படியே சரிபார்த்துக் கொள்ளுங்கள். அது போதும். இப்பொழுது நான் திருப்பிக் கொண்டிருக்கையில், என்னிடத்தில் உள்ள ஒன்று, வழக்கமாகவே நான் என்னுடைய வேத வாக்கியங்களையும் மற்ற காரியங்களையும் குறிப்பு எழுதி வைக்காமலேயே நினைவில் வைத்திருக்க முடிந்தது. ஆனால் நான் இருபத்தைந்து வருடங்களைக் கடந்தது முதற்கொண்டு அவ்விதமாய் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறதில்லை, எனவே நான் அதை எழுதி வைத்தே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. இப்பொழுது நாம் ......... 6அது நன்றாய் இருக்கிறதா? உங்களால் நன்றாய் கேட்க முடிகிறதா? இல்லை. பின்னால் அவர்கள் தங்கள் தலைகளை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை ....... (ஒரு சகோதரன், “நீர் அதற்கு முன்னால் நிற்க வேண்டும்” என்கிறார் - ஆசி.] நிற்க வேண்டுமோ ........ (“சரியாக முன்னால்''] சரி. இது இவ்வண்ணமாய் இருந்தால் எப்படியிருக்கும்? உங்களால் அதை கேட்க முடிகிறதா? அதைக் குறித்து எப்படி? அது நன்றாய் உள்ளதா? அருமை. இது நன்றாய் உள்ளது. இப்பொழுது நான் ஏசாயா 42ம் அதிகாரம் 1 முதல் 7 வசனங்களுக்கும், மற்றும் மத்தேயு 4ம் அதிகாரத்தில் 15 முதல் 16 வசனங்களுக்கும் கூட உங்களுடைய கவனத்தை செலுத்த விரும்புகிறேன். இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்து கொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். அவர் நெறிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற இனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிற வருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது : நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்ட வர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். 7இப்பொழுது பரிசுத்த மத்தேயு 4ம் அதிகாரத்தில் 12ம் வசனத்திலிருந்து துவங்கி, நாம் இதை வாசிப்போம். யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார், கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலு முள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதி யாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அதுமுதல் இயேசு : மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். கர்த்தர் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பாராக! இப்பொழுது இந்தக் காலையில் என்னுடைய பொருள் :வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய் என்பதாகும். இப்பொழுது நீங்கள் அடுத்த அலுவலை கவனிக்கும்படியாய் என்னால் முடிந்தளவு துரிதமாக சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களில் முடிக்கவுள்ளேன். 8நீங்கள் திரு. மக் அனாலி (Mc Anally) அவர்களை அறிவீர்கள், அவர் இங்கிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். நான் அவருடைய பாராக்கட்டை வண்டியை வெளியில் பார்த்தேன். சில காலத்திற்கு முன்னர் இங்கே என்னுடைய முதல் பயணத்தில், அரிசோனாவிற்கு வேட்டைக்குச் செல்ல நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். நாங்கள் இங்கே இந்த குருட்டு நம்பிக்கை வாய்ந்த மலையின் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தோம். நீண்ட காலமாகவே நான் அதைக் குறித்து கேள்விப்பட்டிருந்தேன். அதைக் குறித்து கூறப்பட்டிருந்த மூடநம்பிக்கையான அநேக கட்டுக்கதை களையும் கேள்விப்பட்டிருந்தேன். நான் முதன்முறையாக அதை நோக்கிப் பார்த்ததை நினைவு கூருகிறேன். அதற்கு முந்தின நாள் மூடநம்பிக்கை என்று அறியப்பட்டிருந்த ஒரு பெரிய பேய்த் தோற்றமுள்ள நிழல் எனக்கு கிழக்காக தொங்கிக் கொண்டிருந்தது. நான் இந்தியர்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படி அவர்கள் அதன் அருகில் செல்ல மாட்டார்கள் என்றும், எப்படி அவர் கள் பயந்திருந்தனர் என்றும், எப்படி பண்டைய நாட்களில் அவர்கள் பொன்னைத் தேடி கண்டுபிடித்துக் கொண்டிருந்த போது, ஸ்பானியர் அவர்களை தவறாக நடத்தியிருந்தனர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் பொல்லாத ஆவிகள் அதில் ஜீவித்தன என்பது மெய்யென வாதிட்டனர். இவை யாவுமே என்னுடைய ஆர்வத்தை எழுப்பினது. ஆனால் அந்த மூட நம்பிக்கையை முதலில் காண என்னிடம் ஒரே ஒரு பிரகாசிக்கும் விளக்கு மட்டுமே இருந்தது. 9அப்பொழுது நான் சூரியனின் கம்பீர உதயம் இருளின் மீது அசைவாட ஆரம்பிப்பதை சற்று நேரம் வரையிலும் கவனித்தேன். அது உதயமான போது, அது இருளை ஒளியினிடத்திலிருந்து வேறு பிரித்து விட்டு, இருளை பின்னுக்குத் தள்ளினது. முடிவிலே அது தன்னுடைய உயரத்திற்கு உயர்ந்து, மலையின் உச்சிக்கு மேலே சென்று, அது எந்தவிதமான மூடநம்பிக்கையாய் இருந்தது என்பதை காண்பித்தது. சூரியன் தன்னுடைய வல்லமையினால் அதன் மேல் பிரகாசித்துக் கொண்டிருந்தபோது, எனக்கிருந்த மூடநம்பிக்கையான எல்லா பேய்க்குரிய பயங்களும் பறந்து போய்விட்டன. இந்த பூமியின் மேல் உள்ள இயற்கையான ஒளிகளில், சூரியனே எல்லா ஒளிகளுக்கும் இராஜாவாக இருக்கிறது. நாம் எந்த அளவு செயற்கையான ஒளியை வைத்திருக்க முடிந்தாலும், எந்த அளவு மகத்தான மின்கதிர்களை நாம் உற்பத்தி செய்ய முடிந்தாலும் கவலையில்லை, சூரியன் உதிக்கிறபோது மற்றவைகளெல்லாம் மங்கிப்போகின்றன. அதே காரியம் தான் தேவனுடைய வார்த்தையோடும் உள்ளது. தேவனுடைய வார்த்தை உதயமாகிறபோது எல்லா மூடநம்பிக்கைகளும், ஸ்தாபன மத வைராக்கியங்களும், மற்ற காரியங்களும் தூரமாய் சென்று விடுகின்றன. அது சரியாக என்னவென்பதை இது அப்படியே காண்பிக்கிறது. ஆதியிலே தேவன், “வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்றார். வெளிச்சம் மாத்திரமே வருகிறது, உண்மையான வெளிச்சம், இராஜ வெளிச்சம் தேவனுடைய வார்த்தையால் வருகிறது. ஆதியிலே தேவன் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார். தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டு எப்பொழுதுமே இருளிலிருந்து ஒளியைப் பிரிக்கிறது. ஜனங்கள் இதனோடும், அதனோடும் அல்லது மற்றதோடும் எழுப்பக்கூடும்; கொள்கைகள் எழும்பக்கூடும், பொதுவுடைமைக் கொள்கை, பாஸிசம், மற்ற எல்லா கொள்கைகளும் எழும்பக் கூடும்; மூட நம்பிக்கைகள், சமய கோட்பாடுகள், என்னவாயினும் எழும்பலாம். ஆனால் வேதாகமத்தின் இராஜ வெளிச்சம் உதயமாகிறபோது எல்லா மூட நம்பிக்கைகளும், மற்றவைகளும் மறைந்துவிடும். ஆனால் நீங்கள் பாருங்கள், அங்கு அது உள்ளது என்று நாம் அறிவோம், ஆனால் அது ரூபகாரப்படுத்தப்படுகின்றபோது தன்னுடைய வெளிச்சத்தை நிரூபிக்கிறது; அப்பொழுது அதற்கு எதிராக விவாதிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால் அது மற்ற எல்லா வெளிச்சத்தையும் அடைத்துப் போடுகிறது. இயேசு, “எந்த மனுஷனுடைய வார்த்தையும் பொய், என்னுடை வார்த்தையே சத்தியமாய் இருப்பதாக” என்றார். அவருடைய வார்த்தையே எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தக் காரியத்திற்கும் மேலாக, எல்லா மனிதருடைய வார்த்தைக்கும் மேலாக உயர்ந்ததாய் இருக்கிறது. அவருடைய வார்த்தையே ஒளியாய் உள்ளது. 10ஆதியிலே உலகமானது உருண்டு கொண்டிருக்கையில், அது மூடு பனியாயும், இருளாயும், அந்தகார மாயும் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். அப்பொழுது தேவனுக்கு ஒரு வெளிச்சத்தின் தேவை இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். இப்பொழுது, அவருடைய வித்தானது ஏற்கனவே பூமியில் இருந்தது. ஏனென்றால் அவர் அதை அங்கு நட்டிருந்தார். இப்பொழுது அந்த வித்தை முளைப்பிக்கச் செய்ய, அந்த வித்தை ஜீவிக்கச் செய்ய, அவருக்கு வெளிச்சம் தேவைப்பட்டது. ஏனென்றால் அங்கே வித்தானது ஏற்கனவே இருந்தது. அது ஒவ்வொரு காலத்திலும் இருப்பது போன்றே, தேவன் ஒவ்வொரு காலத்திலும் என்ன சம்பவிக்கும் என்பதை நமக்கு முன்னறிவித்திருக்கிறார். அவருக்கு தேவைப்படுகிற ஒரே காரியம் அதை அந்தக் காலத்தில் ஜீவிக்கச் செய்யும் படியாக அந்த வேத வாக்கியத்தின் மீதான தேவனுடைய வெளிச்சத்தின் வெளிப்படுத்துதலேயாகும். அப்படியா.......? ....... வெளிச்சமானது வார்த்தையைச் சென்றடையும் வரையில் அது அதைச் செய்யும். வார்த்தை முளைவிடப்பட்ட தானால் அது அந்நாளுக்கான ஒரு வாக்குத்தத்தமாய் இருந்தால் அப்பொழுது அது அதனை ஜீவிக்கச் செய்யும். நீங்கள் ஒரு காலத்தில் கோதுமையை அல்லது மற்றொரு காலத்தில் வேறு தானியத்தை நடலாம். ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் மெது வாக வளரலாம். ஏனென்றால் அது பருவ காலத்தையே சார்ந்திருக்கிறது 11நாம் காலங்களினூடாகச் சென்று ஆராய்ந்த பொழுது, தேவனுடைய வார்த்தையானது நியாயப்பிரமாணமும், கிருபையும் போன்று ஏற்ற காலத்திலே யே வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் அது வெளிச்சத்தின் வெளிப்படுத்து தலினால் பிரகாசிக்கப்பட்டு, வித்தில் இருக்கின்ற ஜீவனை வளரச் செய்கிறது. இன்றைக்கு தேவனுடைய வார்த்தையால் சூரியன் பிரகாசிக்கிறது, ஏனென்றால் நாம் அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிற இந்த சூரியன் தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்துதலாய் இருக்கிறது. நாம் வெளியில் காண்கின்ற இந்த சூரிய ஒளியானது, “வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று அவர் கூறின தேவனுடைய வார்த்தையேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர், “வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று கூறியிருந்து, வெளிச்சமே உண்டாகாமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்? அப்பொழுது அது தேவனால் உரைக்கப்பட்டதல்ல. தேவன், ”உண்டாகக்கடவது'' என்று உரைக்கும்போது, அங்கே உண்டாகும். எனவே இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற சூரியன் ஆதியாகமத்தில் உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்து தலாய் உள்ளது என்பதை நாம் கண்டறிகிறோம். இந்நாளின் தேவனுடைய வெளிச்சம் அவருடைய குமாரன் என்பதை நாம் உணருகிறோம். ஒன்று சூரியனாய் (S-U-N) இருந்தது. வேதாகமத்தில் இந்த ஒன்று குமாரன் (S-O-N). குமாரன் வேதமாய் இருக்கிறார். அவர் ......... “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தி லிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது''. எபிரெயர் 13 : 8ல் ”அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்''. அது எப்பொழுது மே தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அது நோவாவிற்குள் இருந்த கிறிஸ்துவாகும். அது மோசேக்குள் இருந்த கிறிஸ்துவாகும் அது ஒரு புறக்கணிக்கப்பட்ட இராஜாவாக நகரத்தை நோக்கிப் பார்த்த தாவீதிற்குள் இருந்த கிறிஸ்துவாகும்; அங்கே எண்ணூறு வருடங்களுக்குப் பின்னர் கிறிஸ்து தாவீதைப் போன்றே ஒரு புறக்கணிக்கப்பட்ட இராஜாவாக அங்கே அமர்ந்து, அந்த பட்டணத்தை நோக்கி அழுதார். அது எப்பொழுதுமே கிறிஸ்துவின் ஆவியாய் இருக்கிறது. தேவ ஆவியினால் இயேசு கிறிஸ்து மூலமாக தேவனுடைய வார்த்தையின் முழு வெளிப் படுத்துதலும் அறிந்து கொள்ளப்பட்டது. 12வெளிச்சத்திற்குப் புறம்பாக எந்த ஜீவனும் உண்டாக முடியாது. வெளிச்சம் உற்பத்தி செய்கிறது. வெளிச்சம் ஜீவனை உற்பத்தியாக்குகிறது. இயற்கையாகவோ அல்லது ஆவிக்குரிய பிரகாரமாகவோ வெளிச்சத்திற்கு புறம்பே எந்த ஜீவனுமே இருக்க முடியாது. அங்கு வெளிச்சம் இருக்கத்தான் வேண்டும். தேவனுடைய வார்த்தையினால் மட்டும் வெளிச்சம் தோன்ற முடியும். தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப் படுகின்றபோது, அது வெளிச்சமாய் இருக்கிறது. தேவன் எல்லா வித்துக்களையும் நட்ட காரணத்தால், இங்கு ஒரு வித்து இருக்கிறது. 13நல்லது, நல்லது, இங்கே எந்த வெளிச்சமும் இருப்பதற்கு முன்பே, இங்கே எந்த ஜீவனும் இருப்பதற்கு முன்பே அல்லது எல்லாக் காரியத்திற்கும் முன்னமே நம்முடைய சரீரங்கள் பூமியின் மேல் இருந்தன; தேவன் பூமியை சிருஷ்டித்தபோது, சுண்ணாம்பு, சாம்பலுப்பு, தாது எண் ணெய், இயலுலக அண்டத்திற்குரிய ஒளி, மற்ற அனைத்துமே இங்கே இருந்தன. அது தாவர ஜீவனையும் அல்லது மர ஜீவனை யும் அல்லது அங்கு இருக்க வேண்டிய தான எல்லா ஜீவனையும் அது கொண்டு வந்தவிதமாகவே இவை ஜீவிக்கும்படியாக ஜீவனுக்குள் கொண்டுவர அதற்கு அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தை மட்டுமே தேவைப்பட்டது. அவருடைய வெளிச்சமில்லாமல் இயற்கையாகவோ அல்லது ஆவிக்குரிய பிரகாரமாகவோ ஒன்றுமே ஜீவிக்க முடியாது. அவருடைய வார்த்தை யே ஒளியாயும், ஜீவனாயுமாயிருக்கிறது. அவர் தம்முடைய வெளிச்சத்தை அனுப்புகிறபோது அதை ஜனங்கள் அறிந்து கொள்ளும் படி செய்கிறார். அப்பொழுதே அது புறக்கணிக்கப்படுகிறது, ஆகையால் அதைக் குறித்து என்ன? அதைக் குறித்துதான் இந்தக் காலையில் நாம் பேச விரும்புகிறோம். இந்த வெளிச்சத்தை புறக்கணித்தல், அது யாருக்கு அனுப்பப்பட்டதோ, அவர்களாலே அப்பொழுது அது புறக்கணிக்கப்பட்டது போலவே புறக்கணிக்கப்படுகிறது. “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், அவரில் நான் பிரியமாயிருக்கிறேன்”. அவர் புறஜாதிகளுக்கு ஒளியாய் இருக்கிறார். அவர் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறார். அவர் உலகத்திற்கு ஒளியாய் இருந்தார், ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டார். அது கவலைக்குரிய ஒரு பாகமாய் உள்ளது. 14ஒவ்வொரு முறையும் தேவன் தம்முடைய வெளிச்சத்தை வெளிப் படுத்து கிற போது, அது அந்த நிலைமையை சந்திக்கிறது. உலகம்தாமே அந்த வெளிச்சத்தை புறக்கணிக்கிறது. ஏன்? அது வேதத்தில் எழுதப்பட்டிருக் கிறது. ஒவ்வொரு காலத்திலும், தேவன் மிகுதியான தம்முடைய வார்த்தையை ஒவ்வொரு காலத்திற்காகவும் பங்கிட்டு வைத்துள்ளார். அவர் எப்பொழுதுமே அந்த வார்த்தையை வெளிப்படுத்துவதற்கு யாராவது ஒருவரை அனுப்புகிறார். இயேசுவானவர், அவர் மேசியாவாக வருவார் என்று நாலாயிரம் ஆண்டுகளாகவே தீர்க்கதரிசனமாய் உரைக்கப் பட்டிருந்தார். அவர் வந்தபோது, அவர் மேசியாவின் ஒவ்வொரு வாக்குத்தத்ததையும் வெளிப்படுத்தினார். ஆனால் அப்படியிருந்தும் உலகத்தின் ஜனங்கள், சபைகள் முதலியன அவரைப்பற்றி ஒன்றையுமே அறிந்து கொள்ள வில்லை. ஏனென்றால் இதை அறிந்து கொள்வதிலிருந்து அவர்களை தடை செய்யும் மற்ற காரியங்களில் அவர்கள் சிக்கியிருந்தனர். இப்பொழுது ஒரு-ஒரு மனிதன் அப்படியிருந்தால் ....... நாம் இயற்கையான பாகத்தை எடுத்துக் கொள்வோம். இங்கே சூரிய வெளிச்சத்தில் நடக்கும்படி பிறந்துள்ள ஒரு மனிதன், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? தேவன் அவனுக்காக அதை சிருஷ்டித்திருந்த போது, அவன் தன் கண்களை மூடிக்கொண்டு, கட்டிடத்தின் அடித்தளத்திற் குள்ளாக ஓடி, கதவை மூடி , திரையை கீழே இழுத்துவிட்டு, சூரியன் பிரகாசித்துக் கொண்டிருப்பதை கண்டுணர மறுப்பது என்னவாயிருக்கும்? அவன் அதனுடைய சிலாக்கியங்களை மறுக்கிறான். அவன் அதனுடைய வெப்பமூட்டும் கதிர்களை, ஜீவனை ய ளிக் கும் அதனுடைய உத வியாதாரத்தை மறுக்கிறான். அவன் எங்கே போய்க்கொண்டிருக்கிறான் என்பதையும், அவன் எங்கிருந்து வருகிறான் என்பதையும், காணும்படி பரவுகின்ற அந்த ஒளியையும் அவன் மறுக்கிறான். அவனே அதை மறுக்கிறான். திரைகளை இழுத்துவிட்டுக் கொண்ட அல்லது கட்டிடத்தின் அடித்தளத்திற்கு ஓடி, எல்லா வெளிச்சத்தையும், எல்லாவிடத்திலும் மறைத்துக்கொண்டு, சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது என்பதை அங்கீகரிக்க மறுத்த ஒரு மனிதனுக்கு நீங்கள் என்ன கூறுவீர்கள்? அந்த நபரிடத்தில் ஏதோ புத்திக் கோளாறு உள்ளது. எவருமே அதை அறிவர். அந்த நபரிடத்தில் புத்திக் கோளாறு உள்ளது என்றும், அவனுக்கு ஏதோ காரியம் சம்பவித்துள்ளது என்பதை ஒரு ஆவிக்குரிய சுபாவ சிந்தையில்லாதவனே உங்களுக்கு கூறிவிடுவான். அவன் தன்னுடைய நல்லுணர்வு நிலைகளை இழந்து விட்டான். நல்லது, நாம் ஜீவிக்கிற இந்த மணிவேளையிலும், அது அவ்வண்ணமே உள்ளது. சுவிசேஷ ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மனிதன் தன்னை ஒருவிதமான சாக்குப் போக்கினால் மறைத்துக் கொண்டு, அதை உண்மையாகவே அடையாளங்கண்டு கொள்ள மறுப்பதும், இன்றைக்கு அவ்வண்ணமே உள்ளது. ஒரு மனிதன் அதை வேண்டுமென்றே அதிலிருந்து விலகி, ஏதோ ஒன்றிற்குள்ளாகச் சென்று, திரையை இழுத்து விட்டு, ''நான் அதை விசுவாசிக்கிறதில்லை '' என்று கூறுகிறபோது, அந்த நபரிடத்தில் ஏதோ புத்திக்கோளாறு உள்ளது. அதனை அணுகுவதற்கான வழியே கிடையாது. ஏதோ கோளாறு உள்ளது. ஏதோ காரியம் அவனுக்கு சம்பவித்திருக்கிறது. இன்றைக்கு அது அதிகளவில் உள்ளது என்பதை நாம் கண்டறிகிறோம். 15இப்பொழுது இயேசுவானவர் ஆவியினால் ஏவப் பட்டிருந்த எல்லா தீர்க்கதரிசிகளுடைய சாட்சியுமாயிருந் தார். அவர்களுடைய எல்லா தீர்க்கதரிசனங்களும், அவருடைய காலத்திற்கென தீர்க்கதரிசனமாய் உரைக்கப் பட்டிருந்தவை, அவருடைய காலத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவரைக் குறித்து தீர்க்கதரிசன மாய் உரைக்கப்பட்டிருந்ததையும், வேதாகமத்தில் உள்ள வார்த்தையாகிய ஒவ்வொரு மெழுகுவர்த்தியையும் அவர் ஏற்றி வைத்தார். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்''. அவள் கர்ப்பவதியானாள். சரி. ”அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தா , சமாதான பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா எனப்படும்“. அவர் அவ்வாறு இருந்தார். ”குருடர் பார்வையடைவார்கள்''. அவர்கள் பார்வை அடைந்தனர். அவர் பூமியின் மேல் வந்தபோது, அவரைக் குறித்து தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டிருந்த யாவும் நடந்தேறின. ஏன் ஜனங்களால் அதைக் காணமுடியாதிருந்தது? ........ இப்பொழுது அது நமக்கு வினோதமாய் தென்படுகிறது. ஏனென்றால் நாம் பின்னால் உள்ளவைகளைக் காணும் கண்ணாடியின் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் அந்த விதமாய் பின்னாகவே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்கள் சேதமடைவீர்கள் என்பதை நீங்கள் எப்போதாவது அறிவீர்களா? நமக்கு முன்னால் என்ன இருக்கின்றது என்பதையே நாம் நோக்கிப் பார்ப்போமாக. 16அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அதைச் செய்யக் காரணம் என்னவென்றால், அவர்கள் மற்றொரு வெளிச்சத்தின் பளபளப்பில் ஜீவித்துக் கொண்டிருந்தனர். வேறொரு நாளின் வெளிச்த்தின் பளபளப்பில் ஜீவித்துக் கொண்டிருந்தனர். நண்பர்களே, இன்றைய உலகத்தோடு உள்ள காரியம் அதுதான் என்று நாம் நம்புகிறேன். ஏனென்றால் நாம் வேறொரு நாளில் பிரகாசித்த ஒரு வெளிச்சத்தின் பளபளப்பில் ஜீவிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். பளபளப்பு ஒரு போலியான ஒளியாய் உள்ளது. வீதியில் உள்ள கானல் நீரைப் போன்றதாகும். நாம் வீதியில் செல்லும்போது, கானல் நீரைக் காண்கிறோம். அது சூரியனுடைய பொய்த்தோற்றமாய் உள்ளது. நீங்கள் அங்கு செல்லும் போது, அது ஏதோ ஒரு போலியான காரியத்தையேயன்றி வேறொரு காரியத்தையும் உண்டாக்கு கிறதில்லை . ஏனென்றால், நீங்கள் சூரியனின் பளபளப்பு ஒளியில் நடக்க முடியாது. ஏனென்றால் அது எப்பொழுதுமே உங்களுக்கு அங்கு இல்லாத ஏதோ ஒன்றைக் காட்டுகிற ஒரு மாயக்காட்சியாய் உள்ளது. 17ஜனங்கள் உங்களிடம் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அல்ல என்று கூறு முயற்சிக்கும்போது அவர்கள் உங்களை ஒரு மாயையான காட்சிக்குள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நீங்கள் சபைக்குச் செல்லும்போதும், சபையில் சேர்ந்து கொள்ளும் போதும், ஏதோ விரைத்துப் போன கோட்பாட்டையோ அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றை நீங்கள் உலகத்தில் பெற்றிருந்ததைத் தவிர வேறொன்றுமே அங்கு இருப்பதில்லை. நான் உங்களுக்கு சொல்லுகிறேன். உங்கள் மீது பரிசுத்த ஆவியின் உஷ்ணமாக்கும் கதிர்களைக் கொண்டு வருகிறதும், உங்களை கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக்குகிறது மான இயேசுவின் சுவிசேஷ வெளிச்சத்தை மறுக்காதீர்கள். வேறொரு காலத்தின் ஏதோ பளபளப்பு மற்றொரு காலத்தில் சரியாய் இருந்திருக்கலாம். அது அவர்களுக்கு சரியானதாய் இருந்திருக்கலாம். ' அது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாட்களில் அவ்வண்ணமாய் நிரூபித்தது. அவர் அந்நாளின் வேதப் பிரகாரமான ஒளியாய் இருந்தார். அவரே ஒளியாய் இருந்தார். அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை ரூபகாரப்படுத்த பூமியின் மேல் வரும் வரையில் அவர் அந்த ஒளியாய் இல்லை . உங்களுக்குத் தெரியும், பிரகாசமாய் பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான். நீங்களும் சிலகாலம் அவனுடைய வெளிச்சத்தில் நடக்க வாஞ்சித்தீர்கள்'' என்றார். நிச்சயமாகவே, ஏனென்றால் அவனுடைய பிறப்பிற்கு ஏழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே யோவான் ஏசாயாவினால், “வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய ஒரு சத்தம் உண்டாகும்'' என்று தீர்க்கதரிசனமாய் உரைக்கப் பட்டிருந்தான். பின்னர் தீர்க்கதரிசிகளில் கடைசியான மல்கியாவும் கூட அவனுடைய வருகைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மல்கியா 3ம் அதிகாரத்தில் அவன், ”இதோ, நான் என் தூதனை எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ண அனுப்புகிறேன்'' என்று கூறினான். இதோ, அந்த எழுதப்பட்ட வார்த்தையை ஜீவிக்கும்படிச் செய்ய யோவான் பூமியின் மேல் இருந்தான். அவன் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாய் இருந்தான், அவன் எப்பொழுது மே .......... மேசியாவுக்கு முன்பாக வழியை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தவனு மாயுங்கூட இருந்தான். இயேசு, ''நீங்கள் அவனுடைய வெளிச்சத்தில் நடக்க விரும்பினீர்கள், ஏனென்றால் அவன் அந்த வெளிச்சமாயும், பிரகாசமாய் பிரகாசிக்கும் விளக்காயும் இருந்தான்'' என்றார். யோவான், அவன், “இப்பொழுது நான் சிறுக வேண்டும், என்னுடைய வெளிச்சம் போய்விட வேண்டும், ஏனென்றால், அது ஜீவித்தது. அது இதை நிரூபித்தது. 18இப்பொழுது, யூதர்கள் உண்மையான வெளிச்சத்தில் ஆராதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருந்த இதே தேவனையே, அவர்கள் ஆராதித்துக் கொண்டிருந்ததாக நினைத்திருந்த அவரையே அவர்கள் சிலுவையில் அறைந்து கொண்டிருந்தனர். அதே தேவனைக் குறித்து அவர்கள் பரியாசம் பண்ணிக் கொண்டும், அவர்கள் ஆராதித்துக் கொண்டிருந்ததாக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே தேவனை, அவரை ஒரு ஜனங்களின் பழிப்புப்பொருளாய் ஆக்கிக் கொண்டிருந்தனர். நான் இதை பயபக்தியோடும், மரியாதையோடும், வெளிச்சத்தைக் கொண்டுவரும்படியாய் கூறுவேனாக. ஏனென்றால் கொஞ்ச நேரத்திற்கு முன்னர் நம்முடைய சகோதரன் கூறினது போல, நாம் ஜீவிப்பதாக நீங்கள் நினைப்பதைக் காட்டிலும், நாம் காலங்கடந்தே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். இந்நாட்களிலொன்றில் ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது, அது மிகவும் காலங்கடந்ததாய் இருக்கப்போகிறது. ஜனங்கள் என்ன செய்து கொண்டிருக் கிறார்கள் என்பதையும் கூட அறியாமல் அவர்கள் மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்வார்கள். இயேசு, “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் அவர்கள் இருவரும் குழியில் விழுவார்களே'' என்றார். நாம் நினைப்பதைக் காட்டிலும் நாம் காலங்கடந்தே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். அநேக உத்தமமான ஜனங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையுங் கூட அறியாமல் அவர்கள் அதை பின்பற்றுகிறார்கள். ஆனால் வெளிச்சமானது, சுவிசேஷ வெளிச்சமானது பிரகாசித்துக் கொண்டிருக்கிறபடியால், அது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று அவரையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபடியால் இப்பொழுது வேளையானது சமீபித்திருக்கிறது. அவர் இந் நாளுக்கென அதை பிரித்து வைத்து விட்டார். அவர் இந்நாளுக்கென வாக்களித்த காரியங்கள் இந்நாளில் சம்பவிக்க வேண்டும். சபை அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். அவர் தம்முடைய செய்தியை கொண்டு செல்வார். ஏனென்றால் அவர் அதையே எப்பொழுதும் செய்துள்ளார். அவர் அதை எப்பொழுதுமே செய்வார். 19ஜனங்கள் வெளிச்சத்தில், பிதாக்களின் பாரம்பரியங்களில் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஒரு வெளிச்சத்தின் பளபளப்பில் நடந்த கொண்டிருக்கிறார்கள். அதே ஒளியில் அல்ல, அவர்கள் ஆராதிப்பதாக உரிமை கோருகிற அதே ஒளியை புறக்கணித்து விட்டனர். அவருடைய கிரியைகள் மூலமாக அவர் யாரென்பதை ரூபகாரப்படுத்தினார். இயேசுவானவர் தாமே, “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?'' என்றார். அவர், ”நான் எதையாவது கூறினேன் என்றும் அல்லது பரலோகப் பிதா என் மூலமாக ரூபகாரப்படுத்தாமலிருக்கிறதை நான் செய்துள்ளதாக உரிமை கோருகிறேன் என்று யார் நிரூபிக்கக்கூடும்?'' என்று கேட்டார். அவர் அந்த வேளையின் வெளிச்சமாய் இருந்தார் என்று உங்களுக்கு நிரூபித்திருந்தார். ஏனென்றால் இந்த மேசியா இந்தவிதமாய் இருக்க வேண்டும் என்றும், இங்கே ஜீவனை அளிப்பார் என்ற அனைத்துமே தீர்க்கதரிசனமாய் உரைக்கப் பட்டிருந்தன. ஆனால் அவர்களுடைய பாரம்பரியங்கள் வார்த்தையின் உண்மையான வெளிச்சத்திலிருந்து அவர்களை பிரித்திருந்தது. 20பரிசேயர்களும், சதுசேயர்களும், ஏரோதியர்களும் என்னவாயிருந்தாலும், அவர்கள் எல்லாக் காலங்களிலும் செய்தது போன்றே, அ வர்கள் உலகத்தோடு மிகவும் ஒட்டிக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அந்த உண்மையான வெளிச்சத்தைக் காணமுடியாதிருந்தது. அது அவர்களுடைய கண்களை குருடாக்கிப் போட்டது. அவர்கள், “அடுத்த நாள் அது இப்படி இருக்கும், நாளை இது இப்படி இருக்கும். நாம் இதில் சேர்ந்து கொள்வோம், அது அப்படி இருக்கும், நாம் அதில் சேர்ந்து கொள்வோம்'' என்ற ஒளியின் பளபளப்பிலே நடக்க பழக்கப்பட்டிருந்தனர். அது ஒரு பொய்த்தோற்றம் என்பதை நாம் கண்டறிகிறோம்.. இயேசு கிறிஸ்து எப்போதும் இருந்ததைப் போன்றே அவர் ஒரு மனித இருதயத்திற்கு இன்றைக்கும் அவ்வளவு உண்மையுள்ளவராய் இருக்கிறார். அவருடைய வல்லமை யும், அவருடைய ஜீவனுள்ள பிரசன்னமும் எப்போதும் இருந்ததைப் போன்று இன்றைக்கு அவ்வளவு தத்ரூபமாய் உள்ளது. “இதோ, இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. KOSMOS 'உலகத்தின் ஒழுங்கு' என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனென்றால் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய் வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்''. அந்த மகத்தான வாக்குத்தத்தம் இன்றுள்ள து. உலகமோ எவ்வளவு குருட்டுத்தனமாய் இருக்கக்கூடுமோ அவ்வளவு குருடாய் உள்ளது. ஆனால் “நீங்கள் என்னைக் காண்பீர்கள்” என்பது ஒன்று உண்டு, அதைத்தான் நாம் இன்று அடைய முயன்று கொண்டிருக்கின்றோம். முழு சுவிசேஷம் என்பதன் பொருள் என்னவெனில், இயேசு கிறிஸ்துவை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையிலும், அவருடைய எல்லா வாக்குத்தத்தங்களின் பரிபூரணத்திலும் வெளிப்படுத்திக் கூறுவதேயாகும். அதாவது பரிசுத்த ஆவியானவர் இந்தக் காரியங்களை வெளிப்படுத்தி, அவைகளை சீர்ப்படுத்துகிறார். ஏனெனில் தேவன் வாக்களித்திருக்கிறபடியால், அவர் அதைச் செய்வார். ஆம் ஐயா. 21அவர் வார்த்தையின் மூலமாக, அவர் செய்து கொண்டிருந்த கிரியைகளின் மூலமாக முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் அவர்களில் எவருமே அதை விசுவாசிக்க விரும்பவில்லை. அவருடைய வெளிச்சமே வார்த்தையாய் இருந்தது என்பதை நிருபித்ததே!. “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்'' என்று வார்த்தையே அதை கூறினது. ஆனால் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த தங்கள் பாரம்பரியங்களோ வேறொரு காலத்தின் பளபளப்பு ஒளியாய் இருந்ததே! அவர்கள், “நாங்கள் மோசேயை விசுவாசிக்கி றோம்; நாங்கள் மோசேயை விசுவாசிக்கிறவர்கள், நீர் எங்கிருந்து வந்துள்ளீர் என்பதை நாங்கள் அறியோம். நீர் உம்முடைய கல்வியை எங்கே கற்றீர்? இதுதான் நீர் என்பதை நீர் எதினால் நிரூபிக்கக்கூடும்'' என்று கேட்டனர். அவர்கள் மட்டும் வேதத்தை வாசித்திருப்பார்களே யானால், அவர் யார் என்பதை அவருடைய கிரியைகளே சாட்சி பகர்ந்தன. அவர்கள் அதை வாசித்துக் கொண் டிருந்தனர். ஆனால் அவர்கள் அதை காணமுடியாமற் போயிற்று. “என் கிரியைகளே என்னை அடையாளங் காட்டுகின்றன.'' 22ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையினால், தேவனுடைய வார்த்தையோடு அனுப்பப்பட்டிருந்தால், அவனுடைய நற்சான்றிதழ்களினால், தேவனுடைய வார்த்தையின் நற்சான்று பத்திரங்களால் அறிந்து கொள்ளப்படுகிறான். ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே! அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வருகிறது. நாம் நேற்றைய வெளிச்சத்தினால் ஜீவிக்க முடியாது. நேற்றைய வெளிச்சம் சரித்திரமாய் உள்ளது. நாம் அதைக் குறித்து ஒன்றையுமே அறியோம். நீங்கள் நேற்று பிரகாசித்த சூரியனால் இன்றைக்கு வெப்பத்தை பெற்றுக் கொள்ள முடியாது. இன்றைக்கு சபைகளோடுள்ள காரியமும் அது தான். ஜனங்களோடுள்ள காரியமும் அதுதான். அவர்கள் நேற்று நடந்ததைக் கொண்டு ஜீவிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு வண்ணந் தீட்டப்பட்ட அக்கினியினால் குளிர் காயமுடியாது. நிச்சயமாகவே முடியாது. அதில் உஷ்ணமே இல்லாதிருக்கிறது. நேற்றைய சூரியனுடைய வெப்பமும் அதில் கிடையாது. 23சூரிய வெளிச்சமானது இயற்கையில் அறுவடைக்காக வளருகிற தானியத்தை முதிர்ச்சியடையச் செய்யவே பூமிக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சூரியனையே கொண்டு வருகிறது. இன்றைக்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிற சூரியனே கனடாவில் உள்ள கோதுமையை முளைத்தெழச் செய்கிறது. அதே சூரியன்தான், நல்லது, சூரியனே இல்லாதிருக்குமானால், வருகிறதான இந்த ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் தானியமே ஒருபோதும் முதிர்வடைய முடியாது. அது இன்னமும் பலமுள்ளதாயும், வலிமையுள்ளதாயும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து தானியத்தை மேலே கொண்டு வரும்படியாய் முதிர்ச்சியடைகிறது. இப்பொழுது தானியமானது தானாகவே, அது முதிர்ச்சியடையத் துவங்குமானால், அப்பொழுது தானியம் மேலே வருகின்றது, அது தானியத்தோடு தங்கியிருக்கு மானால், அது தானியத்தை மட்டுமே வளரச்செய்யும். ஒவ்வொரு நாளும் அதனைச் சுற்றியுள்ள உமியானது சுண்ணாம்புச் சத்து மற்றும் என்னவெல்லாம் அதற்குள் போகிறதோ, அது சூரிய வெப்பம் அதிகமாகின்றபோது, தானியத்திற்குள் வளர்ச்சியை உண்டு பண்ணுகிறது. 24ஆனால் நீங்கள் ஆகஸ்டு மாதத்தில் பிரகாசிக்கின்ற சூரியனை எடுத்து, அதை இன்றைக்கு கோதுமையின் மேல் பிரகாசிக்கச் செய்தால், அது அதனை கொன்று போடும். நிச்சயமாகவே நீங்கள் அதைச் செய்ய முடியாது. அது அதனுடைய பருவ காலத்தில் வரவேண்டும். எனவே தேவனுடைய கோதுமையும், தானியமும் ஏற்ற காலத்தில் அதற்கேற்ற காலத்தில் முதிர்ச்சியடைய வேண்டும். ஆனால் ஒரு சூரியன் எப்படி ...... நல்லது, இன்றைக்கு ஜீவிக்கிற சூரியனால், சரியாகக் கூறினால் இன்றைக்கு பிரகாசிக்கிற சூரியனால் கோதுமை மரித்துவிடும், பழங்கள் மரித்து விடும். அதனுடைய வருகின்றதான அறுவடைக்கே முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. தானியம் வெளிச்சத்தினால் முதிர்ச்சி அடைய வேண்டும். ஆனால் இன்றைக்கு காரியம் என்னவெனில் சபை தானியமானது முதிர்ச்சியடைய விரும்புகிறதில்லை. அது மூடி, சாங்கி, பின்னி, நாக்ஃஸ், கால்வின் போன்றவர்களின் நேரத்தில் இருந்ததைப் போன்றே தரித்திருக்க விரும்புகிறது. அவர்கள் சரியாகத்தான் இருந்தனர், ஆனால் அவர்கள் அந்த மணிவேளையில் வெளிச்சமாய் இருந்தனர். ஆனால் இது மற்றொரு வேளையாய் இருக்கிறது. இது வேறொரு நாளாய் இருக்கிறது. இது சுவிசேஷத்தின் முன்னேற்றமாய் உள்ளது. இது தன்னுடைய முதிர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் லூத்தர் என்ன கூறினார் என்பதிலோ, வெஸ்லி என்ன கூறினார் என்பதிலோ அல்லது மற்றவர்கள் என்ன கூறினார்கள் என்பதிலோ ஜீவிக்க முடியாது. நாம் இந்நாளுக்கென முன்னறிவிக்கப்பட்டிருக்கிற வெளிச்சத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஏழாம் சபையின் காலத்தில் இருக்கிறோம், மூன்றாம் அல்லது நான்காம் சபையின் காலத்தில் அல்ல. தானியம் அதை ஏற்றுக் கொள்ளக்கூடியதாய் இருக்க வேண்டும். அது ஏற்றுக்கொள்ள வில்லையென்றால் அது விழுந்து போகும். அதன் பொருள் அதற்கு ஒன்றுமேயில்லை என்பதாகும். தானியமானது வெளிச்சத்தின் முன்னால் வளருகிறதாய் இருந்தால் அப்பொழுது அது வெளிச்சத்தினாலே முதிர்ச்சி யாக்கப்படுகிறது. 25எனவே சபையானது ஒவ்வொரு காலத்தின் அப்பத்தையும் கொண்டுவர வேண்டியதாய் உள்ளது. இயேசு, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று கட்டளையிட்டார். நமக்கு தேவைப்படுகிற அப்பம் வேதத்தில் உள்ளது. அது தேவனுடைய திட்டத்தின் முழு வெளிப்பாடாய் உள்ளது. அது இயேசு கிறிஸ்துவின் முழு வெளிப்பாடாய் உள்ளது. நாம் அதனோடு ஒன்றையும் கூட்டக்கூடாது அல்லது அதிலிருந்து எதையுமே எடுக்கவுங்கூடாது. அப்படிச் செய்கிறவன் எவனோ அவனுடைய பெயர் ஜீவபுத்தகத்தி லிருந்து எடுக்கப்படும். நாம் அதனோடு எந்த கோட்பாடுகளையும் கூட்ட வேண்டியதில்லை. அது இருக்க வேண்டிய விதமாகவே அது எழுதப்பட்டிருக்கிறது. நாம் அதனோடு ஒன்றையும் கூட்டாமலும், அதிலிருந்து ஒன்றையும் எடுக்காமலும், அது இருக்கிற விதமாகவே அதை பிரசங்கிக்கிறோம். தேவன் அதை நிறைவேற்றுவார். அவர் வாக்களித்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அவர் அதே விதமாகவே நிறைவேற்றுவார். நாம் அதிலிருந்து ஒன்றையும் எடுக்கவோ அல்லது அதனோடு ஒன்றையும் கூட்டவோ வேண்டியதில்லை. அது இருக்கிற வண்ணமாகவே அதை விட்டு விடுங்கள். 26ஆனால் நீங்கள் பாருங்கள், இன்றைக்கு ஜனங்கள் அங்கே அந்நாளில் இருந்ததைப் போன்ற ஒன்றில், ஒரு பளபளப்பில் மீண்டுமாய் ஜீவிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். கோதுமை முதிர்வடைவது போன்றே சபையும் முதிர்ச்சி அடைய வேண்டும், “அதாவது மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஜீவ அப்பமான ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையினாலும் பிழைப்பான்.'' வார்த்தைகளின் பாகத்தினால் அல்ல; ஒவ் வொரு தேவனுடைய வார்த்தையினாலும், ஒவ்வொரு காலத்திலுமே! வெறுமென பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்குகளை மட்டுமே எல்லா நேரத்திலும் புசிக்கும்படி தரித்திருக்காதீர்கள். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆவியினாலும், வல்லமையினாலும் அதைக் குறித்து களிகூர்ந்து, பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவருடைய ஜனங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள முழுமையான தேவனுடைய மாவிருந்திற்கு நாம் செல்லும் போது, அதனோடு மற்ற காரியங்களும் செல்லுகின்றதாய் உள்ளது. ”நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நான் பிழைக்கிறபடியால் நீங்களும் பிழைப்பீர்கள்'' இயேசுவானவர் தம்முடைய சபைக்கு உண்டு பண்ணின வாக்குத்தத்தங்கள், ஆயினும் இன்றைக்கு நாம் ஜனங்கள் கடந்து போன வேறு ஏதோ ஒரு காலத்திற்குள் மீண்டும் செல்ல முயற்சிக்கிறதை கண்டறிகிறோம். 27லூத்தரின் காலம், அது ஒரு மகத்தான காலமாய் இருந்தது. அவர் கத்தோலிக்க சபையின் குற்றத்தைக் கண்டார், இராப்போஜனத்தையும் கண்டார். அந்த வாலிப ஆசாரியன், அவர், “அது கிறிஸ்துவின் சரீரம் அல்ல என்றும்,'' அது தவறு என்பதையும், அவர்கள் ஆசீர்வதித்திருந்தது ஒரு துண்டு அப்பம் என்பதையும் கண்டார். மேலும் அவர், ”அந்த திராட்சை ரசம் உண்மையான இரத்தம் அல்ல என்றும், அது இரத்தத்தை சுட்டிக்காட்டினது என்பதையும் கண்டார். எனவே அவர் அது அந்த மணிநேரத்துக்கான வேளையாய் இருந்த காரணத்தால் அந்த காரியத்திற்கு கண்டனம் தெரிவித்தார். அவர்களுக்கு எத்தனை ஆசாரியர்கள் இருந்தாலும் கவலையில்லை, அவர்களுக்கு இன்னும் என்ன வெல்லாம் இருந்திருந்தாலும் கவலையில்லாமல், தேவன் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்ய ஒரு மனிதனை இறுகப் பற்றிக் கொண்டார். ஆமென். அவர் விசுவாசத்தால் நீதிமானாகுதல் என்பதை ஏற்றுக்கொண்டார். அவர் லூதர் காலத்தின் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்தார். அதன் பிறகு தொடர்ந்து அதன் காலத்திலேயே ஜீவித்தனர். 28சபையானது தன்னுடைய பாவங்களிலிருந்து விலகி பரிசுத்தமாக்கப்பட வேண்டிய மற்றொரு நேரம் வந்தது. அப்பொழுது ஆங்கிலேய சபையைச் சேர்ந்த ஜான் வெஸ்லி என்ற ஒரு ஆங்கிலேய மனிதர் இங்கிலாந்திலிருந்து வந்தார், ஆனால் அவர் சுவிசேஷ வெளிச்சத்தைக் கண்டார். அது பிலதெல்பியா சபை வரவேண்டியதற்கான நேரமாய் இருந்தது. அவர் வந்தபோது, அவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பரிசுத்தமாகுதல் என்ற கிருபையின் இரண்டாவது கிரியையை பிரசங்கித்தார். அதனுடைய வெளிச்சத்தில் ஒன்றுமே நிற்க முடியாதிருந்தது. அவர் லூத்தரைப் போன்றே ஒரு மத வைராக்கியமுள்ளவராக கருதப்பட்டார். ஆனால் அவர் அவர்களெல்லாருக்கும் மறுப்பு தெரிவித்து, வெளிச்சத்தைப் பிரகாசித்தார். ஏனென்றால் அது அந்நேரத்து வெளிச்சமாய் இருந்தது. தேவன் வெளிச்சத்தை பிரகாசிக்கக்கூடிய ஜான் வெஸ்லி என்ற ஒரு மனிதனை கண்டெடுத்தார். அவர் அந்தக் காலத்துக்கான வெளிச்சத்தை பிரகாசித்த லூத்தரையும் கூட ....... கண்டெடுத்தார். பின்னர் தொடர்ந்து பெந்தேகோஸ்தே சகோதரர்கள் வந்தனர். அவர்கள் தங்களுடைய காலத்தில் வரங்களை திரும்ப அளித்தல், வரங்களை திரும்ப அளித்தல், அந்நிய பாஷைகளில் பேசுதலையும், சுகமளிக்கும் வரங் களையும், மற்ற காரியங்களையும் சபைக்கு பெற்றுக்கொண்டனர். இப்பொழுது வேதம் அவர்கள் செய்வதாக கூறியிருந்ததையே சரியாக அவர்கள் செய்தனர். அவர்கள் அதை செய்தபோது, அவர்கள் அதை வெளிப்படுத்தினார்கள். அது முற்றிலும் உண்மை. 29ஆனால் நாம் அதிலிருந்து நகர்ந்து சென்று விட்டோம் என்பதை நீங்கள் உணருகின்றீர்களா? நாம் மணவாட்டியின் நேரத்தில், தெரிந்து கொள்ளும் நேரத்தில், நமக்கு (மண வாட்டிக்கு) ஒரு நேரம் உண்டாயிருக்கும் என்று அவர்கள் கூறின அந்த நேரத்தில் இருக்கிறோம். யோவேல் 2 : 28ல், “முசுக்கட்டைப்பூச்சி விட்டவைகளை, முசுக்கட்டைப் பூச்சி விட்டவைகளை யெல்லாம் பச்சைப் புழு தின்றது; பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது'' என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு ஸ்தாபனங்களும், நீங்கள் வேதத்தின் ஏழு முத்திரைகளை வாசித்துப் பார்த்தால், சீர்திருத்தக் காரர்கள் ஒவ்வொருவரும் புறப்பட்டுச் சென்று வார்த்தையைப் பிரசங்கித்தனர், ஆனால் சிலவற்றை விட்டுவிட்டனர். அப்பொழுது சீர்திருத்தக்காரர்களுக்குப் பின்னர் வெளிச்சம் மங்கத் தொடங்கினபோது அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அடுத்து வரும் வெளிச்சத்தில் நடப்பதற்கு பதிலாக, அதை ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். அவர்கள் அதை ஸ்தாபனமாக்கினபோது, “நாங்கள் இந்த வெளிச்சத்தை நம்புகிறோம். இதுதான் வெளிச்சம். இதுதான் அது'' என்றனர். அவர்கள் என்ன செய்தனர்? வெஸ்லி உடனே வந்து, அவர்களிடமிருந்து விலகிச் சென்று விட்டார். 30வெஸ்லி என்ன செய்தார்? அவருக்குப் பின் அவருடைய, அவருடைய சகோதரன் ஜானும், சார்லஸம் ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து ஆஸ்பரியும் மற்றவர்களும் தங்களுடைய நாட்களில் மெத்தோடிஸ்டு சபை என்றழைக்கப்பட்டதை ஸ்தாபன மாக்கி விட்டனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அடுத்து வந்த வெளிச்சத்தைப் புறக்கணித்தனர். அவர்கள் வெறுமனே, “இதுதான் வெளிச்சம், இதுதான் அது'' என்றனர். அதன் பின்னர், தொடர்ந்து பெந்தேகோஸ்தேயினர் வந்து, தேவன் இன்னமும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அனுப்புகிறார் என்பதை அவர்களுக்கு காண்பித்தனர். அவர்கள் மறுதலித்துள்ள சுகமளிக்கும் அவருடைய வல்லமையை அவர் இன்னமும் சான்றாகக் காட்டுகிறார். அவர்கள் என்ன செய்தனர்? அது மற்றொரு வெளிச்சமாய் இருந்த காரணத்தினால் அவர்களிடத்திலிருந்து விலகிச் சென்றனரோ? 31இப்பொழுது அது என்ன? நாம் அறுபது வருடங்களை கடந்துள்ளோம். பெந்தேகோஸ்துக்களே, “நாங்கள் இது, நாங்கள் அது” என்று ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். தேவன் அதிலிருந்து தூரமாய் விலகி விட்டார். அதற்கு அப்பால் அந்தக் கூட்டத்திலிருந்து தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு மணவாட்டியைக் கொண்டு வருகிறார். இன்னொரு சபைக் காலம் இருக்கப் போவதில்லை. பிலதெல்பியா சபையின் காலத்தில் வெஸ்லி இருந்தார். லவோதிக்கேயா சபையின் காலத்தில் பெந்தேகோஸ்தே ஸ்தாபனம் இருக்கிறது. அவை யாவும் நேராக மிருகத்தின் முத்திரைக்குள்ளாகச் செல்லுகின்றன. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த சகோதரன் கூறிக் கொண்டிருந்தது போல அது வேதமாய் உள்ளது. அது உண்மை . சரி. அவர்கள் யாவரும் அந்த ஸ்தாபனங்களில் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் அடுத்து வரும் வெளிச்சத்தில் நடக்க மறுத்தனர். அவர்கள் தங்களையே ஸ்தாபனமாக்கிக்கொண்டு, “நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்'' என்று கூறுகிறார்கள். தேவன் ஒன்றைச் செய்கிற போது, அதை வேத வாக்கியத்தோடு ஆராய்ந்து பாருங்கள். பரிசேயர்கள், “நாங்கள் அதை உடையவர்களாய் இருக்கிறோம்'' என்றனர். சதுசேயர்கள், ”நாங்கள் அதை உடையவர்களாய் இருக்கிறோமே“ என்றனர். ஆனால் தேவன் திறவுகோலைக் கொண்டு திறந்து வெளிச்சத்தைக் காட்டினார். அது எப்பொழுதும் இருந்து வந்ததைப் போன்று அது புறக்கணிக்கப்பட்டது. 32கத்தோலிக்க சபை லூத்தரை புறக்கணித்தது. வெஸ்லி லூத் தரை புறக்கணித்தார். அதே வண்ண மாக பெந்தேகோஸ்துக்கள் வெஸ்லியை புறக்கணித்தனர். பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கு பெந்தேகோஸ்துக் களை புறக்கணித்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் மற்றவர் களைப் போன்றே அவ்வளவு சம்பிரதாயமாயும், குளிர்ந்து போய்க் கொண்டுமிருக்கிறீர்கள். ஒவ்வொருவருமே அதைக் காணமுடியும். நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் வேதத்திற்கு மிகவும் நெருக்கமாய் இருக்கின்றீர்கள். அதைக் குறித்து நான் அறிவேன், அதனால்தான் நான் உங்களோடு இருக்கிறேன். ஆனால் கவனியுங்கள், உங்களுடைய கண்களைத் திறந்து, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நாளைப் பாருங்கள். இதுவே வெளிச்சம் உண்டாக, ஒரு மரத்தை வெளியே எடுக்க, மீண்டும் திறக்கும்படியான திறவுகோலுக் கான நேரமாய் உள்ளது. வேதம் மல்கியா 4-ல், “அவர் ஜனங்களிடத்திலிருந்த மூல விசுவாசத்தை திரும்பவும் அளிப்பார்” என்று கூறியுள்ளது. அவர் அதை வாக்களித்தார். அவர் அதை எப்பொழுதுமே செய்து வந்திருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பினார். தீர்க்கதரிசி களிடத்திறகு வார்த்தை வந்த காரணத்தாலே தீர்க்கதரிசிகள் வந்தனர். அவர்கள் வார்த்தையைப் பெற்றிருந்து அதை ஜீவிக்கச் செய்தனர். 33ஒவ்வொரு காலத்திலும் ஸ்தாபனங்களும், காலத்தின் முறைமைகளும் அவைகளை புறக்கணித்தன. எனவே இன்றைக்கும் அவர்கள் அதையே செய்வார்கள். அப்பொழுது தேவன் செய்தது போல, இன்றைக்கும், இப்பொழுதும் ஒரு மனிதனை எழுப்ப அவர் வல்லவராய் இருக்கிறார். அவர் எப்போதும் ஸ்தாபனங்களை எழுப்பினதில்லை. சரித்திரத்தினூடாக நோக்கிப் பார்த்து, எந்த சரித்திரக்காரரையாவது கேட்டுப் பாருங்கள். ஒரு ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டபோது, அது அங்கேயே மரித்து ஒருபோதும் மீண்டும் எழும் பின தேயில்லை. தேவன் தனிப்பட்ட நபர்களிடையே பேசுகிறார். உண்மை . தேவன் அதை இந்தக் கடைசி நாட்களில் மீண்டும் செய்வதாக வாக்களித்தார். அவர் அதைச் செய்வார். இந்நாளின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வேத வாக்கியங் களை ரூபகாரப்படுத்தும்படியான வெளிச்சத்தை பிரகாசிக்க தேவன் என்ன வாக்களித்திருக்கிறாரோ, அதை அவர் செய்வார். இயேசு, “லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்'' என்றார். நீங்கள் தெளிவுபடுத்துங்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். யேகோவா , அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை நோக்குங்கள். நம்முடைய பிதா ஒவ்வொன்றையும் அதன் ஸ்தானத்தில் பொருத்தியிருக்கிறார். அங்கே உலகில், சோதோமில் எல்லா பாவத்தோடும் வெது வெதுப்பாய் லோத்து இருந்தான். அங்கே அவனிடத்திலும் கூட பிரசங்கிக்க ஒரு தூதன் இருந்தான். 34குமாரனுக்காக உண்மையிலே காத்துக்கொண்டு, வாக்குத்தத்தத்தோடு வெளியே இழுக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமுடைய கூட்டம் இருந்தது. லோத்தும் கூட ஒரு குமாரனுக்காக எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். ஆனால் ஆபிரகாம் அவனுக்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்த வடிவில் அல்ல. என்ன சம்பவித்தது? அது சம்பவிப்பதற்கு சற்று முன்பு தேவன் இறங்கி வந்து, மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்தி, அவர் வார்த்தையாயிருந்தார் என்பதை வலியுறுத்திக் கூறினார். ஏனென்றால், “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகவும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருக்கிறது''. இயேசு, ”மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் அப்படியே இருக்கும்'' என்றார். இந்த வாக்குத்தத்தங்கள் திவ்விய மானவை. அவை இயேசு கிறிஸ்துவின் உதடுகளினால் உரைக்கப்பட்டிருந்தன. வானங்களும், பூமியும் ஒழிந்து போம், ஆனால் அனவ ஒருபோதும் ஒழிந்து போகாது. தேவன் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவரா யிருக்கிறார். ஓ, ஆம்! 35இஸ்ரவேலர் இருந்ததைப் போன்று நாம் நம்முடைய பிரயாணத்தில் இருக்கிறோம். இஸ்ரவேலர் தங்களுடைய பிரயாணத்தில் ஒவ்வொருவரும் புதிய மன்னாவை பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் புதிய மன்னா விழுந்தது. நாம் லூத்தரின் வெளிச்சத்தில் ஜீவிக்க வேண்டியவர்கள் அல்ல, வெஸ்லியின் வெளிச்சத்தில் ஜீவிக்க வேண்டியவர்கள் அல்ல, அல்லது பெந்தேகோஸ்தே வெளிச்சத்தில் ஜீவிக்க வேண்டியவர்கள் அல்ல. நாம் வேறொரு காலத்தில் இருக்கிறோம், புதிய மன்னா. அவர்கள் மன்னாவை மறு நாளுக்கென சேமித்து வைக்க முயற்சித்ததால் என்ன சம்பவித்தது? அது கெட்டுப் போய்விட்டது. அது அவர்களைக் கொன்று போடும். அந்தக் காரணத்தினால்தான் நாம் அநேக ஆவிக்குரிய மரணத்தையும், கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படுபவர்களையும் பெற்றுள் ளோம். அவர்கள் வேறொரு நாளின் பளபளப்பில் புசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே கெட்டுப்போன மன்னாவை புசித்துக் கொண்டிருக்கிறார்கள். வெறுமனே , கோதுமையின் மேலுள்ள உமியைப் போன்றே, அது கோதுமைக்குள் செல்லவில்லையென்றால் அது கோதுமையை விட்டு வெளியே செல்கிறது. வெளிச்சமானது புறக்கணிக்கப்படுகின்றபோது, அது செய்கிற ஒரு காரியம் இருளாகின்றதேயொழிய வேறொன்றுமில்லை. இருளின் எந்தப் பகுதியும் வெளிச்சத்தைக் காண மறுக்கும் பொழுது இருளுக்குள்ளாகவே திரும்பிச் செல்கிறது. அது சுவிசேஷத் திலும் அவ்வண்ணமே செய்கிறது. ஒவ்வொரு காலத்திலும் அது அவ்வண்ணமாய் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. நாம் அந்த நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 36நேற்றைய தினத்தினுடைய மன்னா கெட்டுப் போய் விட்டது. நான், “நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் இன்னின்ன தைச் செய்தேன்'' என்று கூறு கிறதை கேட்டிருக்கிறேன். அது சரி, ஆனால் இன்றைக்கு அதைக் குறித்து என்ன? கொழுந்து விட்டெரிந்த நிலையில் இருந்த சபையைக் குறித்தென்ன? நாம் நேற்றைய தினத்தைக் குறித்துப் பேசுகிறோம். ஆனால் இன்றைய சபையைக் குறித்து என்ன? இன்றைக்கு தனிப்பட்ட நபராய் இருக்கையிலே உன்னைக் குறித்தென்ன? ஏனென்றால் இன்றைக்காக நேற்றைய தினத்தினுடையது கிரியை செய்யாது. அது ஏற்கனவே நேற்றையதாய் இருந்தது. யோவானுடையதைப் போன்றே லூத்தருடைய செய்தி அந்த வேளையின் வெளிச்சமாய் இருந்தது. ஆனால் அதைக் காட்டிலும் ஒரு மகத்தான வெளிச்சம் உதயமானது. எனவே லூத்தர் ஒரு மகத்தான வெளிச்சமாய் இருந்தார். நாம் ஒரு காலத்தில் அவரைக் குறித்து மகிழ்ந்தோம். ஆனால் அவருடைய வெளிச்சத்தை அணைக்க மற்றொரு வெளிச்சம் உண்டானது. அது என்ன செய்திருக்க வேண்டுமென்றால், அதனோடு இசைந்து, அது பரிபூரண அப்பத்தின் துண்டாக, தேவனுடைய மன்னாவாக ஆகியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். மனிதன் அதற்குள்ளாக சென்றுவிட்டான். தேவன் அதை வழிநடத்துவதற்குப் பதிலாக மனிதனும், அவனுடைய முறைமைகளும் அதற்குள்ளாகச் சென்று அதை குருடாக்கிப் போட்டது. 37ஓ, இன்றைக்கு இந்த மணவாட்டி மரம் கிளை நறுக்கி சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. கனி கொடாத எந்தக் கிளையும் தரிக்கப்பட்டிருக்கிறது. இயேசு பரிசுத்த யோவான் 15-ல் அவ்வண்ணமாய் கூறினார். இப்பொழுது என்ன சம்பவித்துள்ளது, அவைகள் வெட்டப்பட்டு, கிளை நறுக்கி சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நாம் காண்கிறோம். நினைவிருக்கட்டும், அந்த மரத்தின் இருதயம் சரியாய் மரத்தின் மையத்தில் உள்ளது. கனியானது எப்பொழுதுமே பழுத்து விடும். ஒரு மரமானது கடைசியாக கனியைக் கொடுக்கும்போது, கனியானது அதனுடைய உச்சியில்தான் சரியாக இருக்கும். ஏனென்றால் அதற்கு விதையிலிருக்கின்ற ஜீவனின் மையத்திலிருந்துதான் புதுப்பசுமை உண்டாகிறது. 38இது ஒரு மணவாட்டி மரம். இயேசு மணவாட்டி யாய் இருந்தார். அவரே ஒரு மரமாய் இருந்தார். அவர்கள் அவரை வெட்டினர். அவரே ஏதேன் தோட்டத்தில் ஜீவ விருட்சமாய் இருந்தார். அவர்கள் அவரை வெட்டி, ஒரு ரோம் மரத்தின் மேல் பரிகாசம் செய்யும்படி தொங்க வைத்தனர். அவர் என்ன செய்தார்? தேவன் மூன்றாம் நாளிலே மரித்தோரிலிருந்து அவரை எழுப்பினார். இன்றைக்கு ஒரு மணவாட்டி மரம் உண்டு. அது துவக்கத்திலே பெந்தேகோஸ்தே நாளில் துவங்கினது. சபையைச் சார்ந்துள்ள நீங்களே கவனியுங்கள்! சபை ஒருபோதும் ரோமாபுரியில் உள்ள நிசாயாவில் துவங்கவில்லை. எருசலேமிலே துவங்கினது. சபை பெந்தேகோஸ்தே நாளில் துவங்கினது. அப்பொழுது அவர்கள் என்ன செய்தனர்? அப்படியே தொடர்ந்து ஸ்தாபன மாக்கிக் கொண்டே சென்றனர்; தேவ னோ தொடர்ந்து கிளைகளை வெட்டிக் கொண்டேயிருக்கிறார். பின்னர் அவர்கள் லூத்தரனை ஸ்தாபனமாக்கினர். கிளைகள் வெட்டப்பட்டன. வெஸ்லி; கிளைகள் வெட்டப்பட்டன. பெந்தேகோஸ்தே; கிளைகள் வெட்டப்பட்டன. இது உண்டாகுமட்டாய் ........ ஆனால் தேவன் ஒரு மண வாட்டி மரத்தை உடையவராய் இருக்கப்போகிறாரே! “பச்சைக் கிளிகளும், முசுக்கட்டை பூச்சிகளும் தின்ற யாவையும், நான் திரும்ப அளிப்பேன்'' என்று கர்த்தர் உரைக்கிறார். மல்கியா 4 பெந்தேகோஸ்தே நாளில் இருந்த ”பிதாக்களின் விசுவாசம்“ போன்ற மூல விசுவாசத்திற் கே. நாம் மீண்டும் கொண்டுவரப்படுவோம் என்று நமக்குச் சொல்லுகிறது. அது உண்டாகும் என்று நாம் விசுவாசிக்கிறோம். இப்பொழுது அதற்கான நேர மாய் இது உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். கிளைகள் வற்றிச் சுருங்கி, காய்ந்து விட்டன. அவர்கள் மரத்தின் உச்சியில் அது கனியைக் கொடுக்கும்படியாய் மரத்திலிருந்து அவைகளை தரித்துப் போடுவார்கள். ஓ, என்னே ! 39இந்த வெளிச்சங்கள் எல்லாம் சரிதான். இன்றைக்கு சபையானது அந்த வெளிச்சத்தோடு கூட இன்றைக்கு அது பெற்றுள்ள வெளிச்சத்தோடு கூடியதாய் இருக்கிறது. அது அறுவடையை முற்றுப் பெறச் செய்ய உள்ளது. மரமானது தனக்குத்தானே , இல்லை ............ கோதுமை யான து வெளிச்சத்தினால் முதிர்ச்சியடைய வேண்டும். அதுதானே ஒரு இலைக்கதிரிலிருந்து ஒரு தானியமாக, ஒரு தானியமாக வளர வேண்டியதாய் இருக்கிறது. அது வெளிச்சத்தினால் முதிர்ச்சியடைகிறது. மற்ற காலங்களின் வெளிச்சம் இந்த காலத்தைக் குறித்து சாட்சி மட்டுமே பகர்கிறது. லூத்தரின் வெளிச்சம் வெஸ்லியின் வெளிச்சத்தைக் குறித்து சாட்சி பகர்ந்தது. வெஸ்லி பெந்தேகோஸ்தே வெளிச்சத்தைக் குறித்து சாட்சி பகர்ந்தார். அது அதே வெளிச்சமாய் உள்ளது. வெளிச்சத்தினால் மட்டுமே முதிர்ச்சியடைந்தது. ஜனங்கள் அதை மட்டும் காணக்கூடுமானால் நலமாயிருக்கும்! 40சில காலத்திற்கு முன்பு நான் ஒரு சிறிய கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தின் இராணி (இந்த இராணி அல்ல) மற்றொரு இராணி. அவள் அருமையான காகிதத்தை தயாரித்துக் கொண்டிருந்த ஒரு காகிதத்தொழிற்சாலையை காணச் சென்றாள். அவள் அந்த தொழிற்சாலையின் தலைவரால் நேர்முகப் பேட்டி கண்ட போது, அவர் அவளை அந்தத் தொழிற்சாலையினூடாக சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றார். அவளோ அந்த அருமையான காகிதம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைக் காண விரும்பினாள். அவர் அவளை அழைத்துச் சென்று அந்த பெரிய எந்திரத்தையும், மற்ற எல்லாக் காரியங்களையும் அவளுக்குக் காண்பித்தார். அந்த நாட்களில் அவர்கள் காகிதத்தைத் துணியிலிருந்து தயாரித்து வந்தனர். நமக்கு அது நன்றாக நினைவிருக்கிறது. எனவே அவர் ஒரு அறைக் குள்ளாகச் சென்று அந்தக் கதவைத் திறந்தார். அங்கே ஒரு மூட்டை கந்தைக் துணிகளேயன்றி வேறொன்றுமில்லா திருந்தது. அந்த இராணியோ வியப்பில் ஆழ்ந்து, “இந்த அழுக்கான பொருட்கள் என்ன?'' என்றாள். அந்த மனிதர், அத்தொழிற்சாலையின் முதல்வர், “அது நேற்று துணியாய் இருந்தது, பாருங்கள் அது அழுக்காக மாறிவிட்டது. நாங்கள் அதை வீசியெறிவதில்லை, ஆனால் அது நாளைய காகிதமாய் உள்ளது'' என்றார். அவள், “எனக்கு இது புரியவில்லை '' என்றாள். அவர், “நீங்கள் நாளை அதை புரிந்து கொள்வீர்கள்'' என்றார். 41எனவே அவர்கள் இந்த கந்தைகள் இயந்திரத்தினூடாக கடந்து சென்று, ஒரு குறிப்பிட்ட சுத்தமாகும் செய்முறையினூடாக, ஒரு குறிப்பிட்ட காரியத்தினூடாக, ஒரு செயல் முறையினூடாக அது கடந்து செல்ல வேண்டிய தாய் இருந்தது. அது வெளி வந்த போது அது அழகான காகிதத்தாளாக இருந்தது. அந்த தலைவர் அந்த இராணிக்கு இதுவரை அவள் அறிந்திராத ஏதோ ஒன்றை காண்பிக்கப் போவதாக அவர் நினைத்தார். அவர் அவளுடைய ஒரு முகத்தோற்ற வரைபடத்தை அதன் மீது வைத்து, அதை இந்த அழகான காகிதத்திற்குள்ளாக அழுத்தினார். அந்த இராணி அதைப் பெற்றுக் கொள்ளும்போது, அவள் நேற்றைய அழுக்கான கந்தைத் துணிகளில் தன்னுடைய சொந்த ஒரு முகத்தோற்ற வரைபடத்தைக் கண்டாள். ஏனென்றால் அது ஒரு குறிப்பிட்ட செய்முறையின் மூலமாகச் சென்றது. ஓ, லூத்தர், வெஸ்லி அவர்கள் அனைவருமே நேற்றைய தினத்தினுடைய மூலப்பொருள், அது ஒரு செய் முறையினூடாகச் செல்லும் போது மட்டுமே உபயோகப்படுத்தக்கூடும் என்பதை காணமுடிந்திருந்தால் நலமாயிருக்கும்! பரிசுத்த ஆவியானவர் வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறபோது, நீதிமானாகுதலிலிருந்து பரிசுத்த மாக்கப்படுதலுக்கும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கும் மாறி, இப்பொழுதோ கிறிஸ்துவினுடைய வருகையின் கடைசி வேளையாய் இருக்கிறது. அது அதில் ஒருமுகத்தோற்ற வரைப்படத்தைப் பெற்றுள்ளது. அது இராணியினுடைய தல்ல, ஆனால் தம்மைத்தாமே பிரதிநிதித்துவமாக காட்டுகிற பரலோக இராஜாவினுடையதாய் உள்ளது. சபையானது சிறுபான்மையினருக்குள்ளாக நெருங்கிவிட்டபடியால் அவருக்கிருந்த அதே விதமான ஊழியத்தைப் போன்றே இந்த ஊழியமும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. லூத்தரின் காலத்தில் மரித்தவர்கள் கூர் நுனி கோபுரத்தின் அடியில் இருக்கின்றதைப் போலவே; ஒரு கூர்நுனி கோபுர உபதேசமல்ல, ஆனால் வெறுமனே உதாரணமே. 42உங்களில் யாராவது அங்கு சென்று பார்த்திருந்தால், அந்த கூர்நுனி கோபுரம் அவ்வளவு பரிபூரண மாய் இருக்கிறது. நீங்கள் அதற்கிடையில் ஒரு சவரக்கத்தியையும் நுழைக்க முடியாது. அதனுடைய கட்டிடப்பாங்கு அவ்வளவு மகத்தான தாய் இருந்ததே! இப்பொழுது, அவர்கள் தலைக்கல்லை இழந்துவிட்டனர். அது எங்கே இருக்கிறது என்பதை அவர்கள் அறியார்கள். இப்பொழுது தலைக்கல் திரும்ப வரும்பொழுது, அது அதனுடைய மற்ற கற்களைப் போன்றே இருக்கும். கல்லில்லாமல் திறந்த வண்ணமாய் விடப்பட்டிருக்கிற இடத்தில் அது வேறுபாடற இணையும். நீங்கள் அதன் தலைக்கல்லாக வைக்க வேண்டுமானால், அது அவ்வண்ணமாய் இருக்க வேண்டும். 43இயேசு திரும்பி வரும்பொழுது, அவர் கழுவப்பட்ட தாயும், கரைதிறையற்றதுமாயிருக்கிற ஒரு சபையையேக் காண்பார். அதற்கு அவருக்கிருந்த அதே ஊழியம் இருக்கும். அதுவே தலைக் கல்லைத் திரும்பக் கொண்டு வரும். இங்கே நிழலில் காணப்படுகிற என் கரத்தைப் போன்றே. அது ஒரு நிழலாய் இருக்கிறது, என்னுடைய கரம் அதில் வெறுமனே கறுப்பாய் மட்டுமே உள்ளது. இங்கு அது ஒரு நிழற்படமாயும், இங்கோ ஒரு நிழற்பட நேர்படிவமாயும் உள்ளது. ஒரு நிழற்படமும், நிழற்பட நேர்படிவமும் போன்று அது அதிகமாக இருளடைந்து, இருளடைந்து, இருளடைந்து கொண்டே முடிவில் அவை இரண்டும் ஒன்றாகி விடுகிறது, நிழலும் நிஜமும் ஒன்றாகி விடுகிறது. அப்படித்தான், சபையும், கிறிஸ்துவும் ஒன்றாக இணைகின்றது, ஒரு மணவாட்டியாக, அவருக்குள்ளிருந்த அதே ஆவி அவள் மேல் இருக்கும். சபையானது நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலிருந்து கடைசி நாட்களுக்குள்ளாகச் சென்று, கர்த்தருடைய வருகைக்கென இப்பொழுது அது செதுக்கப் படுகிறது. ஓ, பெந்தேகோஸ்தே சகோதரனே, அதில் மேல் உள்ள கரடுமுரடான பகுதியாய் இருக்காதே. வார்த்தையோடு பிரகாசித்து, அதன் ஒவ்வொரு துணுக்கையும், விசுவாசி. இன்றைக்கு நாம் உண்டாயிருக்கிறதாகக் காண்கிற இந்த கொள்கைகளுக்குள்ளும் மற்ற காரியங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதே. அதைக் குறித்து ஆச்சரியமடையாதே ஏனென்றால் தலைக்கல், “அப்பா பிதாவே” என்றும் “ என் தேவனே!, என் தேவனே!'' என்றும் வெகு சீக்கிரத்தில் ஆரவாரமிட வந்து கொண்டிருக்கிறது. ஆம். நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். நீங்கள் அதைக் காண்கின்றீர்களா? நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது கிறிஸ்து நேற்றைய கந்தைகளான லூத்தரன், மெத்தோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் போன்றவர்களை எடுத்து, அவர் அதை ஒரு செய்முறையினூடாக இயக்கிக் கடக்கும்படி செய்து கொண்டிருக்கிறார். எந்தவிதமான செய்முறை? பரிசுத்த ஆவியின் செய்முறை. அவர்களுக்கு இருந்ததோடு கூடுதலாக, அவர் தம்முடைய சுய ரூபத்தை நெருக்கி இணைத்துக் கொண்டிருக்குமட்டாய் செய்கிறார். அப்பொழுது சபையும் கிறிஸ்துவும் இணைப்பில் ஒன்றாகி விடுகின்றனர். தேவனே அதை அருளும்! நீங்கள் அதைக் காண்கின்றீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதை காணவில்லையென்றால் ........ 44அது ஒரு சம்பவத்தை நினைப்பூட்டுகிறது. அதாவது பெரிய வேல்ஷ் எழுப்புதல் நடந்து கொண்டிருந்ததாம். இங்கே தேசத்தில் உள்ள சில பெரிய மனிதர்கள் அங்கு சென்று, வேல்ஷ் எழுப்புதலையும், அங்கு என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் காண வேண்டும் என்று எண்ணினராம். அவர்கள் அதைக் கண்டறிய அங்கு சென்றபோது, அவர்கள் அது எந்த கட்டிடத்தில் நடக்கிறது என்று அவர்கள் காண விரும்பினர். அவர்கள் வேல்ஷ் நகரத்தை அடைந்தபோது, அவர்கள் சுற்றும் முற்றும் நடந்து, அந்த கட்டிடம் எங்கிருக்கிறது என்பதைக் குறித்து கேட்கத் துவங்கினர். அப்பொழுது அவர்கள் மூலையில் ஒரு சிறு அதிகாரி தன்னுடைய சிறிய தொப்பியை அணிந்து, தன்னுடைய தடியை இந்த விதமாய் சுழற்றிக் கொண்டு சந்தோஷமாய் நின்று கொண்டிருப்பதைக் கண்டனர். எனவே இந்த மனிதர்கள் அவரிடம் நடந்து சென்று, “ஐயா, வேல்ஷ் எழுப்புதல் எந்தக் கட்டிடத்தில் நடைபெறுகின்றது என்பதை நீர் எங்களுக்கு கூறமுடியுமா?'' என்று கேட்டனர். அவரோ, “ஆம் ஐயா, நான்தான் அது! நானேதான் அது!'' என்றார். ஏன்? அவர் தனக்குள்ளிருந்த வேல்ஷ் எழுப்புதலை - வேல்ஷ் எழுப்புதலின் வெளிச்சத்தை சந்தோஷமாய் பரவவிட்டுக் கொண்டிருந்தார். 45இன்றைக்கு பெந்தேகொஸ்தே சபையானது அந்த விதமாகத்தான், “இயேசு கிறிஸ்து யார்?” என்று கேட்கக் கூடியதாய் இருக்கிறது. நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராயிற்றே! அவருடைய சுவிசேஷத்தின் அவருடைய வெளிச்சத்தை இக்காலத்தின் வார்த்தையோடு இயேசு கிறிஸ்துவை தேசத்திற்கு வெளிப்படுத்த, அது அப்பொழுது இருந்ததைப் போன்று பிரகாசிக்க வேண்டியதாய் இருக்கிறது. அவரே வேல்ஷ் எழுப்புதலாய் இருக்குமளவிற்கு அவர் வேல்ஷ் எழுப்புதலினால் அவ்வளவாய் நிரப்பப்பட்டிருந்தார். நாமும் இந்நாளுக்கென நமக்கு பங்களிக்கப்பட்டுள்ள அவருடைய வார்த்தையின் வல்லமையில் அவரை பிரதிபலிக்குமளவிற்கு நாம் கிறிஸ்துவினால் அவ்வளவாய் நிரப்பப்பட வேண்டும். சகோதரர்களே, உலகத்தின் காரியங்களில் முன்னோக்கிச்சாய வேண்டாம். இந்தக் கவலைகள் உங்களை தூரக் கொண்டு செல்ல அனுமதிக்காதே. சுவிசேஷத்தோடு தரித்திரு. ஒவ்வொரு வார்த்தையையும் கவனி! பாதிரியார் கூறின ஏதோ ஒன்றிற்கு திரும்பிச் சென்று விடாதே. இப்பொழுது நாம் இந்நாளில் என்ன சம்பவிக்கும் என்று இயேசு கூறினதற்கு செல்வோமாக. ஆம் ஐயா, நாம் சுவிசேஷத்தை வெளிப்படுத்துகிற இக்காலத்தின் வெளிச்சமாய் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். லூத்தர் தன்னுடைய வெளிச்சமாய் இருந்தார். வெஸ்லி தன்னுடைய வெளிச்சத்தோடும், பெந்தேகோஸ்தேயினர் தங்களுடைய வெளிச்சத்தோடும் இருந்தனர். ஆனால் இப்பொழுது நாமோ பாதையில் இன்னும் சற்று தூரமாய் இருக்கிறோம். நாம் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்ட மணவாட்டிக் குள்ளாக வந்து கொண்டிருக்கிறோம். நினைவிருக்கட்டும், நீங்கள், நீங்கள் அந்த அதிகாரியைப் போன்றிருந்தால் நலமாயிருக்கும். அவர் அதை தனக்குள்ளாகப் பெற்றிருந்தார். 46நினைவிருக்கட்டும், இது ஏழாம் சபையின் காலம், லவோதிக்கேயா சபைக்காலம். வெளிப்படுத்தின விசேஷம் 3ன் படி அவர்கள் கிறிஸ்துவை புறக்கணிக்கின்றனர். வேதாகமத்தில் குறிப்பிட்டிருந்த ஒவ்வொரு சபைக் காலத்திலும், அவைகள் எல்லாவற்றிலுமே லவோதிக்கேயா சபைக்காலமே மிகவும் மோசமானதாய் இருந்தது. அது அவரை வெறுத்து ஒதுக்கி, அவரை புறக்கணித்து, அவரை வெளியே தள்ளிவிட்டது. போப்பாண்டவர் ரோமாபுரியிலிருந்து, எருசலேமிற்கு செல்லும் முன்னர் அன்றொரு நாள் சந்திரன் இருளடைந்ததை நீங்கள் கண்டீர்களா? எருசலேம் மிகப் பழமையான சபை சந்திரன் சபைக்கு மாதிரியாய் இருக்கிறது. அது சூரியன் இல்லாதிருக்கையில் எப்பொழுதுமே சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது. அது இருளடைந்து போனது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான் அதை ஒரு கரும்பலகையில் வரைந்து சபைகளுக்கும், தேசத்தின் ஊடாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீடுகளிலும் காட்டியிருந்தேன். அது என்ன? ஓ நிழல், முதன் முறையாக போப்பாண்டவர் புறப்பட்டு இங்கு வந்தார். பவுல் என்ற பெயரில் வந்து, அந்த இடங்களுக்கெல்லாம் சென்றார். அவர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தபடியால் அதை ஆசீர்வதிக்க வேண்டியதாய் இருந்தது. ஆற்றிற்கு ஆசீர்வாதம் தேவைப் படுகிறதா என்ன? 47இன்றைக்கு நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த சபை காலத்தோடுள்ள காரியம் என்ன? உங்களால் அதை காண முடிகிறதா? தேவன் அதை ஆகாயத்தில் தெரிவித்து, அதை தம்முடைய வார்த்தையில் அறிவித்து, செய்தித்தாளில் அதை விளம்பரப்படுத்தி, ஜனங்கள் மத்தியில் அதை வலியுறுத்திக் கூறுகிறாரோ? நீங்கள் உங்களுடைய கண்களைத் திறந்து இந்த வேளையைக் காண முடிய வில்லையா? இவைகளே சத்தியத்தை சாட்சி பகருகின்றன. இதுவே இவ்வேளையின் வெளிச்சமாய் உள்ளது. பெரிய உலக கிறிஸ்தவ முழு சபை சங்கத்தின் அசைவையும், இப்பொழுது அங்கே நடை பெற்றுக் கொண்டிருக்கிற ஆலோசனையையும், அப்படியே உருவாகிக் கொண்டிருக்கிற மிருகத்தின் சொரூபத்ைைதயும், வெளிப்படுத்தின விசேஷம் 17-ல் சரியாக அது என்ன செய்ய உள்ளது என்று கூறப்பட்டிருப்பதையும் கவனியுங்கள். பெந்தேகோஸ்தே ஜன ங்களே, நீங்கள் அதற்காகவே அமைதியாய் அமர்ந்திருந்து அதற்குள்ளாக செல்லப் போகின்றீர்களா? பலவந்தம் பண்ணுகிற வேளையானது வந்தாயிற்று. 48இப்பொழுதே எழுந்து உங்கள் விளக்கை சுத்தம் செய்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தோடும், வல்லமை யோடும் பிரகாசிக்கக்கூடிய நேரமாய் இருக்கிறது. இது பொது மக்களால் விரும்பப்படாதது என்பதை நான் அறிவேன். என்னுடைய அநேக பெந்தேகோஸ்தே நண்பர்கள் போப்பாண்டவரோடும், மற்ற காரியங்களோடும் அமர்ந்து, “ஒரு ஆவிக்குரிய உணர்வு'' என்று கூறுகிறார்கள். எனக்கோ அது தவறாய் உள்ளது. அது வேதத்திற்கு கண்ணிற்கு நன்றாக காணப்படுகிறது. அந்நாட்களி லெல்லாம், அந்நாளில் காய்பா ஆசாரியர்களுக்கு எதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தா னோ அது நன்மையானதாகவே காணப்பட்டது. ஆனால் இயேசுவோ வார்த்தையை ஜீவிக்கச் செய்து கொண்டிருந்து, வெளிச்சமாய் இருந்தார். ஆனால் அவர்களுடைய ஆலோசனைகள் அவர்களுடைய கண்களை அதற்கு குருடாக்கியிருந்தது. அவர், “அவர்களை விட்டு விடுங்கள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் அவர்கள் அனைவருமே குழியில் விழுவார்களே” என்றார். சகோதரர்களே, சகோதரிகளே, நாம் அந்த மணி நேரத்திற்கு மீண்டுமாய் திரும்பியிருக்கிறோம். நாம் மீண்டுமாய் அந்த வேளைக்கே திரும்பியிருக்கிறோம். கவனியுங்கள், ஏன்? அதே காரணம். 49கடந்த நாட்களில் நாம் ஜீவித்திருந்த இந்த மகத்தான வெளிச்சங்களை நாம் கண்டறிகிறோம். அவர்கள் வெளிச்சமாய் இருந்தார்கள், நாம் அவர்களுக்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால் இந்த லவோதிக்கேயா சபைக் காலத்தில் ஜாக்கிரதையாயிருங்கள். நினைவிருக்கட்டும், இது கிறிஸ்துவை புறக்கணித்த ஒன்றாய் இருக்கிறது. இப்பொழுது சரியாக அந்த விதமாகத்தான் அது உள்ளது. இந்த பெரிய ஆலோசனை சங்கம் சுற்றும் முற்றுமாய் எல்லா புராட்டெஸ்டென்டுகளையும் இந்த உலக கிறிஸ்தவ சபை சங்கத்திற்குள் இணைக்க செயலாற்றுகிறது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அது வார்த்தையைத்தானே மறைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது, வார்த்தையே கிறிஸ்து. அவர்கள் எப்படி செய்ய முடியும்? கிறிஸ்தவ விஞ்ஞானம், ஐக்கிய சகோதரர்கள், மற்ற பெரிய ஸ்தாபனங்களில் உள்ள ஜனங்களில் அநேகர், சிலர் கன்னிப் பிறப்பை விசுவாசிக்கிறார்கள், சிலர் விசுவாசிக்கிறதில்லை. சிலர் இதை மற்றோர் அதை விசுவாசிக்கிறார்கள். நீங்கள் எப்படி உங்களை அவிசுவாசத்தோடு இணைத்துக் கொள்ள முடியும்? “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?'' அவர்களுக்கு மத்தியில் இருந்து வெளியே வந்து, வேறு பிரித்துக் கொண்டு, தேவனுடைய பரிசுத்த வார்த்தையை ஏற்றுக் கொண்டு, அதனோடு தரித்திரு. இயேசு கிறிஸ்து தம்முடைய வார்த்தையை வெளிப் படுத்த கடமைப்பட்டவராயிருக்கிறார். இன்றைக்கு நமக்கு தேவைப்படுகிற காரியம் என்னவெனில் மல்கியா 4 எழும்புவதே ஆகும். மற்றொரு தீர்க்கதரிசி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழும்பி, அவர் செய்வதாக வாக்களித்தது எதுவோ அதைச் சரியாக செய்வார். அப்பொழுது மனிதர்களோ குருட்டுத்தனமாக அதை புறக்கணித்து விட்டு அவர்கள் எப்பொழுதும் செய்துள்ளது போன்றே நேராக இருளுக்குள் நடந்து சென்று விடுவார்கள். 50இப்பொழுது கவனியுங்கள், இன்றைக்கு அதே காரணத்தினால்தான் அவர்கள் புறக்கணிக்கிறார்கள், சபைகளும் செய்தியை புறக்கணிக்கின்றன. வார்த்தையை சிலுவையிலறைந்து, வார்த்தையை வெளியே எடுத்துப் போடுகிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். இப்பொழுது நீங்கள் அதை சார்ந்திருக்கவில்லையென்றால் நீங்கள் சபையையும்கூட வைத்திருக்க முடியாது. அவர்கள் அதை மூடிவிடுவார்கள். நீங்கள் அதற்குள்ளாக வந்தாகத்தான் வேண்டும். நீங்கள் அதை செய்யவில்லை யென்றால், நீங்கள் மூடப்பட்டுவிடுவீர்கள். எனவே அதைக் குறித்து என்ன? ஓ, சரியானதெதுவோ அதற்காக நில்லுங்கள்.! நினைவிருக்கட்டும், இது ஏறத்தாழ மீண்டுமாய் சிலுவையில் அறைகின்ற நேரமாய் உள்ளது. 51அண்மையில் உலகத்தில் எப்போதும் நடந்திராத மிகப் பெரிய - மிகப்பெரிய வழிப்பறிக் கொள்ளை இங்கிலாந்தில் நடக்க போலியான வெளிச்சம் காரணமாயிருந்தது. எப்போதும் நடந்திராத மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளை ஒரு போலி வெளிச்சத்தினால் செய்யப்பட்டது. இரயில் வண்டியின் வேகத்தைக் குறைத்த ஒரு போலி வெளிச்சத்தினால் எழுபது இலட்சம் டாலர் வழிப்பறிக் கொள்ளையாக அடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் துப்பறியும் இரகசிய காவல்துறைப் படையினர்களால் (Scotland Yards) அந்த மனிதனை கண்டுபிடிக்க முடியாமற்போயிற்று. அவர்கள் அவ்வளவு திறமையாய் தண்டனையே பெறாமல் தப்பி விட்டனர். இயற்கையில் கொள்ளையர்களால் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளைகளிலேயே மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உலகத்தை கொள்ளையடித்து விட்டது, அதனுடைய மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளையாய் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் சபைக்கு இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய கொள்ளை எதுவெனில், இந்த காலத்திற்கென முன்னறிவிக்கப்பட்டிருக்கிற வெளிச்சத்தை புறக்கணித்து, மற்ற ஏதோ ஒரு காலத்தின் பள பள ப் பில், போலியான வெளிச்சத்தில் நடப்பதேயாகும். ஆமென். போலியான வெளிச்சம், நேற்றைய ஒளியின் பளபளப்பே! நேற்றைய வெளிச்சத்தின் பளபளப்பில் நடக்காதீர்கள். இன்றைய சூரியனின் வெப்பத்திலேயே நடந்து செல்லுங்கள் . “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன” என்று கூறுகிற ஒரு ஸ்தாபன திரைக்குள்ளாக உங்களை மறைத்துக் கொள்ளாதீர்கள். 52இயேசு, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், இந்த அடையாளங்கள் அவர்களைப் பின் தொடரும்'' என்றார். அவர்கள், “அது அப்போஸ்தலர்களுக்கு சரியானதாய் உள்ளது; நமக்கானதல்ல” என்கிறார்கள். அது ஒரு ஒளியின் பளபளப்பு. இயேசு, “உலகம் முழுவதற்கும் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்றார். ஆம் ஐயா. இப்பொழுது காரியம் என்ன? ஒரு ஒளியின் பளபளப்பில் நடப்பது அதுவே மிகப்பெரிய கொள்ளைக்கு காரணமாகின்றது. அது சபையிலிருந்து கிறிஸ்துவை எடுத்து விடுகிறது. பாருங்கள், கிறிஸ்து தம்மை இன்றைக்கு வாக்களிக்கப்பட்டுள்ள வார்த்தையில் வெளிப்படுத்தும்போது, எப்படி ஏதோ குளிர்ந்து போன நேற்றை கோட்பாட்டில் வெளிப்படுத்தக்கூடும்? அது வித்தை உஷ்ணப்படுத்துகிற தில்லை. இல்லை ஐயா, சபையினுடைய மிகப் பெரிய கொள்ளையாயிற்றே! வெப்பமா? நினைவிருக்கட்டும், அந்தக் குளிர்ந்து போன கோட்பாட்டின் வெளிச்சம் இன்றைய வித்தை முதிர்ச்சி யடையச் செய்யாது. அது வித்தை மறுக்கிறது. அது பூமியின் மேலிருக்கிற மூடுபனியாய், அடர்த்தியாய் உள்ளது. இது தேவன் எழும்பி, வெளிச்சத்தை மீண்டுமாய் பிரகாசிக்கச் செய்து, அவருடைய வார்த்தையை ஜீவிக்கச் செய்யும் படியான நேரமாய் உள்ளது. நிச்சயமாக, வெளிச்சமே! அந்தக் குளிர்ந்து போன கோட்பாடு தானியத்தை முதிர்ச்சியடையச் செய்யாது. அது நிச்சயமாகச் செய்யாது. நினைவிருக்கட்டும், நாகரிகம் சூரியனோடு பிரயாணம் செய்துள்ளது. 53நான் துவக்கத்தில் கூறினது போல, நான் இயற்கை தடையின்றி இயங்குவதையும், உவமைகளையும், கவனிக்க வேண்டியவனாய் இருக்கிறேன். நான் அதைச் செய்ய கல்வியறிவை பெற்றிருக்கவில்லை. நான் அதைச் செய்ய விரும்புகிறதில்லை. நான் உலகத்தில் உள்ள எல்லா கல்வியறிவுகளைக் காட்டிலும் நான் பெற்றிருக்கிறதையே பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் இயேசு கிறிஸ்துவை உடையவனாய் இருக்கிறேன். நான் அவரை அவருடைய வார்த்தையின் மூலமாக ஜீவிப்பதை காண்கிறேன். நான் அறிந்து கொள்ள விரும்புவதெல்லாம் அவ்வளவுதான். ஒரு மனிதன் தேவனுடைய ஆவியில் பிறந்திருந்தால், அவன் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அது இந்நாளுக்கான பதிலாய் உள்ளதா என்பதைக் காண்பான். இந்நாளுக்கான பதில் கிறிஸ்துவே. கிறிஸ்து வார்த்தையாய் இருக்கிறார். வார்த்தையானது ஜீவனுக்கு வரும் பொழுது அது இந்நாளுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வெளிச்சத்தைக் காட்டுகிறது. இந்த இருண்ட லவோதிக்கேயாக் காலம் வெறுமனே ஒரு சிலரையே, “நான் ஏற்றுக்கொண்டவர் களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; மனந்திரும்புங்கள்'' என்கிறது. இயேசு ”திரும்பி வாருங்கள்'' என்றார். வார்த்தைக்குத் திரும்புங்கள். அவரே வார்த்தை. அவரண்டைக்கே வாருங்கள். ஆம், ஐயா. 54வெளிச்சத்தை கவனியுங்கள். அது கிழக்கிலிருந்து வந்து மேற்கே செல்கிறது. நாம் மேற்குக்கரையில் இருக்கிறோம். அதற்கு மூன்று கட்டங்கள் இருந்தன. அதற்கு இல்லையா? அதற்கு மூன்று கட்டங்கள் இருந்தன. அது மூன்று முறை தண்ணீரைக் கடந்தது. பவுலிலிருந்து மத்தியதரைக் கடலைக் கடந்து ஜெர்மனிக்கு வந்து, லூத்தரால் ஜெர்மனியில் வெளிச்சம் மூட்டப்பட்டு இங்கிலாந்து நாட்டுக் கால்வாயைக் கடந்தது. ஐக்கிய நாடுகளுக்குள்ளாக வந்து இங்கிலாந்திற்குள் ......... பின்னர் இங்கிலாந்தை கடந்து அது பசிபிக் வழியாக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள்ளாக வந்தது. அது லூத்தருடைய செய்தியின் மூலமாக கிரியை செய்து தொடர்ந்து அதன் கடைசி பாகம் வரையிலுமே இங்கே மேற்குக்கரை வரை மீண்டுமாக தன்னுடைய பாதையில் கிரியை செய்தது. 55தானியத்தின் முதிர்ச்சியிலிருந்து, லூத்தரின் காலம் முதற்கொண்டே மற்ற காலங்களினூடாக கடந்து வந்து, இப்பொழுது அது பூரண சுவிசேஷத்தை அடைய தேவனுடைய வல்லமையினால் முதிர்ச்சி அடைய வேண்டும். நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பெந்தேகோஸ்தே காலத்தின் மூலம் காட்டப்பட்ட வெளிச்சத்தின் மூலமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கென மணவாட்டி மரம் முதிர்ச்சி அடைய வேண்டும். அப்பொழுது கிறிஸ்து தம்முடைய சபையில் ஒரே நபராக, அவரும் அவருடைய மனைவியுமாக, அவரும் அவருடைய மணவாட்டியுமாக வெளிப்பட முடியும். ஆமென்! இந்த வேளையில்தான் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். இதுவே இந்நாளின் வெளிச்சமாய் உள்ளது. அதிலே நடவுங்கள். “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே இரட்சிக்கப்படுங்கள்'' 56இந்நாளின் போலியான பளபளப்பு சபையை அதிகமாய் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. இயேசு மத்தேயு 24-ல் கூறினார். அவர், “கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக” என்றார். பாருங்கள், இல்லை லூத்தர் பெற்றுக்கொள்ளவில்லை ........ லூத்தர் ஒரு மெத்தோடிஸ்டை வஞ்சிக்க முடியாது. ஒரு மெத்தோடிஸ்டு ஒரு பெந்தேகோஸ்தேக்காரனை வஞ்சிக்க முடியாது. அது உண்மை. பாருங்கள், ஆனால் மண வாட்டியைக் குறித்தென்ன? அதனால்தான் பெந்தேகோஸ்தேயரின் கண்கள் மறைக்கப்பட்டுள்ளது. ஆம், பாருங்கள், நீங்கள் உங்களுடைய கோட்பாட்டிற்கு உங்களுடைய முறைமைக்கு, ஸ்தாபனத்திற்கு திரும்பிச் சென்று, என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிற ஒரு கூட்ட மனிதரை ஏற்படுத்திக் கொண்டீர்கள். 57வேதம் இந்தக் காரியங்களை வாக்களிக்கிறது. தேவனுடைய ஆவியினால் நிரப்பப்படுகின்ற புருஷர்களும், ஸ்திரீகளுமே நமக்குத் தேவை. நீங்கள் உங்களுக்குள் தேவனுடைய ஆவியை பெற்றிருப்பதாக நீங்கள் கூறினால், இங்கே தேவன் ஒரு குறிப்பிட்ட வாக்குத்தத்தத்தை உண்டுபண்ணுகிறபோது, “நல்லது, அது இன்னொரு காலத்திற்கானதாய் இருக்கலாம். நாங்கள் அதை அந்த விதமாக விசுவாசிக்கிறதில்லை'' என்று எப்படி பரிசுத்த ஆவியானவரால் அதை வலியுறுத்திக் கூறமுடியும்? அது பரிசுத்த ஆவியே அல்ல. தேவனால் நிரப்பப்பட்டிருக்கிற மனிதனுக்கு அவரும் அவருடைய வார்த்தையும் ஒன்றாகவே இருக்கிறது. நிச்சயமாகவே அது ஒன்றாகவே இருக்கின்றது. அது தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள ஒரு இணைப்பாய், ஒரு சந்திப்பின் விளைபயனாய் உள்ளது. 58ஒரு கணவனாகப் போகிற ஒரு மனிதனுக்கு மனைவியாகப் போகிற ஒரு ஸ்திரீ எப்படி அவன் விரும்பாத காரியங்களை முரண்பாடாக அவள் செய்ய முடியும்? நாம் உலகத்தோடும், ஸ்தாபனங்களோடும், ஸ்தாபன அமைப்புகளோடும் சரசமாடிக் கொண்டு, எப்படி இவ் வேளைக்கான வெளிச்சத்தை புறக்கணித்துத் தள்ள முடியும்? சகோதரனே, சகோதரியே அது எப்படி செய்யப்படக் கூடும்? உங்கள் ஒவ்வொருவர் மீதும் தெய்வீக அன்பும், மரியாதையும் கொண்டுள்ளேன். எப்படி நாம் இந்தக் காரியங்களை ஏற்றுக் கொள்ள முடியும்? எப்படி நாம் அதைக் கேட்க முடியும்? அது மீண்டுமாய் நம்முடைய மடியிலேயே திரும்பவும் எறியப்படுகிறது. லூத்தரன்கள் கத்தோலிக்கர்களை பழித்துரைத்த காரணத்தால், அவர்களை பழித்துரைக்காதீர்கள். வெஸ்லி லூத்தரன்களை பழித்தரைத்த காரணத்தால் அவரையும் பழித்துரைக்காதீர்கள். பாருங்கள், அந்த விதமாகவே, நீங்கள் இன்றைக்கு சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியத்தை பழித்துரைத்து அதிலிருந்து விலகிக் கொள்ளும் போது, நீங்கள் உங்களுடைய சபைகள் இந்த பெரிய உலக கிறிஸ்தவ ஐக்கிய சபை சங்கத்தின் அசைவுக்குள்ளாக செல்வதைக் காணும் போதும் இன்னும் மற்றவைகள் உங்கள் ஒவ்வொருவரையும் மிருகத்தின் முத்திரைக்குள்ளாக வழி நடத்திச் செல்லும். நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள். அநேக உத்தம இருதயங் கொண்ட ஜனங்கள் நேராக அதற்குள்ளாக நடக்கின்றனர். நீங்கள், “அவர்கள் நல்ல ஜனங்கள், பரிசுத்தமான ஜனங்கள்'' என்கின்றீர்கள். அந்த ஆசாரியர்களும் அவ்விதமாகத்தான் இருந்தனர். நான் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தத்தை அல்லது ஆவியின் கனியை எடுத்துக்கொள்ள வேண்டியதாய் இருந்ததால், உங்களில் அநேகர் இதன் பேரில் ........ சென்றுவிட்டீர்கள். இப்பொழுது அதைக் குறித்து கவனமின்மையால் அல்ல. நான் அதனடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன். அநேகர், “ஓ, நான் பாஷைகளில் பேசினேன். நான் அதை பெற்றுவிட்டேன்'' என்று கூறுவார்கள். அதுவல்ல அது. இல்லை ஐயா. அவர்களில் அநேகர், “ஆவியின் கனி அதுதான்'' என்கிறார்கள். அதுவா? 59நாம் சற்று நேரம் இயேசுவை வழக்கு விசாரணையில் வைப்போம். (தேவனே என்னை மன்னியும் நாங்கள் உங்கள் நினைவிற்கு கொண்டு வருகிறோம். நான் ஆசாரியனாய் உள்ளேன். “நசரேயனாகிய இயேசு என்றழைக்கப்பட்ட இந்த வாலிப நபர் பட்டணத்திற்குள்ளாக வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கு செவி கொடுக்க வேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாம் ஆவியின் கனிகளை விசுவாசிக்கிறோம். இப்பொழுது இங்கே உங்களுடைய அன்பான வயோதிப ஆசாரியனைப் பாருங்கள். அவன், அவனுடைய பாட்டனார், பூட்டனார் எல்லோரும் ஆசாரியர்களாய் இருந்தனர். அவன் தன்னுடைய வாலிப் ஜீவியம் முழுவதையும் தியாகம் செய்தான். அவன் குருவாலயத்திலேயே தரித்திருந்தான். அவன் விழிப்போடி ருந்தான், அவன் - அவன் விசுவாசித்தான். அவர்கள் அவனுக்கு போதித்த ஒவ்வொன்றையும் அவன் செய்து வந்தான். அவன் வேத வாக்கியங்களை தொடக்கத்திலிருந்து முடிவு வரை அறிந்திருக்கிறான். அவன் தானே அதை எழுதவும் கூடச் செய்கிறான். வேத பாரகர்கள் செய்கிறதைப் போல வேத வாக்கியங்களை தானே எழுதுகிறான். இதோ அவன் ஒரு மாட்சிமையான மனிதனாய் இருக்கிறானே! நீங்கள் அவனை அறிந்திருக்கிறீர்கள். உங்களுடைய தாயார் உங்களை பிரசவித்தபோது, என்ன சம்பவித்தது? உங்களுக்கு அருகில் நின்றது யார்? அந்த அன்பான வயோதிப ஆசாரியனே. தாயும் தகப்பனும் பிரிந்து போவதாயிருந்தபோது, அவர்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் போட்டுக் கொள்ளச் செய்து, அவர்களை மீண்டுமாய் தேவனண்டைக்கு வழிநடத்தினது யார்? அந்த அன்பான வயோதிப ஆசாரியனே. ஆம். 60இங்கே யேகோவாவிற்கு பாவத்திற்கான ஒரு பலியாக ஒரு ஆட்டுக்குட்டி தேவையாயிருக்கிறது. வர்த்தக புருஷர்கள், அவர்கள் இங்கே பட்டணங்களில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பொருட்கள் முதலியனவற்றையும், தங்களுடைய உற்பத்திப் பொருட்களையும், உற்பத்திகளையும், அவர்கள் என்ன வெல்லாம் விற்கப்போவதாக உள்ளன ரோ அதையெல்லாம் விற்கிறார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளை வளர்க்கிறதில்லை. அந்த ஆசாரியர்கள் என்ன செய்தனர்? இந்த மனிதர் உள்ளே போய் யேகோவாவோடு தன்னுடைய ஆத்துமாவை சுத்திகரித்துக்கொள்ளும்படியாக அவர்களுக் குள்ளாகவே ஆட்டுக்குட்டிகளை விற்பதற்காகவே அங்கு ஒரு சிறு சந்தைக்கடை அடுக்குப்பேழையை உண்டு பண்ணினர். நசரேயனாகிய இயேசு என்னும் இந்த நபர் என்ன செய்தார்? அவர் எந்த சபையிலிருந்து வந்தார்? அவர் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்? எந்த ஐக்கிய அட்டையை வைத்துள்ளார்? நாம் அவரை உதைத்துத் தள்ளுவோம். நமக்கு அவரோடு எவ்வித சம்மந்தமும் இருக்கக்கூடாது. ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டுகிறார். அவர் என்ன செய்தார்? ஜனங்கள் தங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்கும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிற இடத்திற்கே, இன்றைக்கு நாம் அதை சபை என்றழைக்கிறது போன்ற இடத்திற்கே, அங்கு அவர் சென்று ஆவிக்குரிய சிந்தை கொண்ட ஜனங்களாகிய உங்களைப் பிடித்து, அவர் மேஜைகளை கவிழ்த்துப்போட்டு, சில்லரைக் காசுகளை வீசியெறிந்து, கயிறுகளை எடுத்து அவைகளை ஒரு சாட்டையாகப் பின்னி, அடித்து, அவர்களைத் துரத்தி, உங்களுடைய தேவ பக்தியான வயோதிப ஆசாரியரை “பிசாசின் குமாரன்'' என்று அழைத்தார். நீங்கள் தொல்லைக்குள்ளாக இருந்த போது, உங்களுக்கு பணத்தை கடனாக வழங்கிய அந்த அன்பான வயோதிப மனிதனையே அவ்வாறு அழைத்தார். “நீங்கள் மரிக்கும்போது, உங்களுக்கு அருகில் நின்று உங்களை அடக்கம் செய்யப் போகிறது யார்? அந்த அன்பின் வயோதிப ஆசாரியனே . அவர் ஆவியின் கனியைப் பெற்றிருக்கிறார். ஆனால் இந்த நசரேயனாகிய இயேசு வினிடத்தில் ஆவியின் கனிகள் உண்டா?'' 61நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதன் மூலம் நிதானிக்க முடியாது. ஆவியின் கனியைக் கொண்டும் நீங்கள் தீர்ப்புக் கூறிவிட முடியாது. ஆனால் அது வெளிச்சத்தைக் கொண்டு வருகின்ற தேவனுடைய வார்த்தையின் வெளிப் படுத்துதலாய் இருக்கிறது. வெளிச்சமே அதை செய்கிறது. அந்த வெளிச்சத்தில் நடக்கிற மனிதனே! இயேசு கிறிஸ்து அந்நிய பாஷையில் பேசியிருந்தும், அதை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. அவர் ஆவியின் கனியாய் இருந்தும், ஆவியின் கனியற்றவராகவே கருதப்பட்டார். நீங்கள் அதனை நியாயந் தீர்க்கவே முடியாது . ஆனால் அவர் விசு வாசித்து, அதை வலியுறுத்தினார். தேவன் அந்நாளின் வாக்குத்தத்தமாயிருந்த ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் மூலமாய் ஜீவித்தார். அதுவே அவ்வேளையின் வெளிச்சமாய் உள்ளது. அதுதான் அடையாளம். 62அவர் களுக்குள் விழும் பரிசுத்த ஆவியானது தேவனுடைய வார்த்தை இவ்விதமாய் இருப்பதை மறுதலிக்கும் என்று ஒரு மனிதன் கூறுகிறபோது, அதனோடு ஏதோ காரியம் தவறாக உள்ளது. அவர்கள் ஒரு மனிதனுக்கு இங்கிருக்கின்ற (Brain-washed theology) கருத்து மாற்றத்துக்கான வன்பிடி போதனையான வேத சாஸ்திரம் அனைத்தையும், இன்றைய கோட்பாட்டையும் போதிக்கும் போது, நம்முடைய வேத பாட பள்ளிகளில் ஏதோ காரியம் தவறாய் உள்ளது. அந்த மனிதர்கள் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக அதைச் செய்து அவர்களை அங்குள்ள அந்த உலக கிறிஸ்தவ சபைகளின் ஐக்கிய படுகொலைக் களத்திற்குள் நேராக வழிநடத்துகிறார்கள், ஏன்? நிச்சயமாகவே அது தவறு. நான் கர்த்தருடைய நாமத்தில் அதை உரைக்கிறேன்! இவ் வேளை யின் வெளிச்சம், இந்த வெளிச்சம் இது உண்மையானதுதானா என்பதை நீங்கள் கவனித்திருந்து பாருங்கள். இந்த குளிர்ந்து போன கோட்பாடுகள் ஒரு அறுவடையை ஒருபோதும் கொண்டுவர முடியாது. நாம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டுள்ள ஒரு சபையை, வார்த்தையோடு ஒன்றான சபையை யே உடையவர்களாக இருக்க வேண்டும். 63சபை இந்நாளின் பளபளப்பில் மிகவும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. இயேசு, “கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் கூட'' என்றார். தெரிந்து கொள்ளப்பட்ட வர்களை மட்டுமே.! ”ஆனால் நோவாவின் நாட்களில் எட்டுப் பேர் மட்டுமே காக்கப்பட்டிருந்தபோது எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்''. அந்த நேரத்தில் மிக மிக சொற்பமானவர்களே காப்பாற்றப்படுவார்கள். அது என்ன செய்கிறது? அது கொலைக் களத்திற்கு நேராக வழிநடத்துகிறது. இப்பொழுதுள்ள இந்த இருளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் கண்டறிகிறோம். நான் முடிக்கையில் இதை கூறுகிறேன். இப்பொழுது நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த அந்தகார இருளில், இப்பொழுது நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில், வெளிச்சமானது வானத்திலிருந்து திரும்பப் பட்டிருக்கிறபோது, அது நமக்கு காட்சியளிக்கும்படியாக இங்கு நமக்கு மத்தியிலேயே பிரகாசித்துள்ளது. வேதாகமத்தின் மூலமாக என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்பது ஏழு முத்திரைகளில் காட்டப்பட்டுள்ளது. இங்கு தேவன் அதை வானத்தில் தெரிவித்து, நேராக இறங்கி வந்து, பூமியின் மேலும் அதை அறிவிக்கிறார். சபைகள் அதற்குள்ளாக நடந்து செல்கின்றதே! ஆகையால் வார்த்தையை காத்துக்கொள்ளும் அந்த சிறிய மணவாட்டியை காத்துக்கொள்வது யார்? அவள் தானாகவே குளிர்ந்து போனவளாய் மாறிவிடுகின்ற பொழுது அவளுக்கு என்ன சம்பவிக்கப் போகிறது? அவள் இந்நாளின் ரூபகாரப்படுத்தப்பட்ட வாக்குத்தத்தமான வார்த்தையா யிருக்கிறபடியால் குளிர்ந்து போக மாட்டாள். ஓ, ஆம். அது ஒருவிதமான ........ 64அது குழப்பமாய் இருக்கிறது. ''நல்லது, அது கிட்டத் தட்ட அதே காரியம் தான்“ என்று சபை வெறுமனே கூறுகிறதை ஜனங்கள் காணும்போது, அது ஜனங்களுக்கு குழப்பமாயிருக்கிறது என்பதை நான் அறிவேன். அது அவ்வித மாய் இருக்கும் என்று இயேசு கூறினார். ”கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கத்தக்கதாக“ என்ற அளவிற்கு அது இருக்கும். ஓ, ஆம், ஆம் ஐயா. அண்மையில் பிளாரிடாவில் இருந்த ஒரு மனிதனைக் குறித்து எனக்கு நினைவிற்கு வருகிறது. அவன் பேசிக் கொண்டிருந்தபோது, பிளாரிடாவில் அவன் பெயரில் ஓடிக் கொண்டிருந்த ஒரு செவர்லெட் (Cheverolet) காரை அவன் வைத்திருந்ததாகவும், அவன் அதை மோட்டார் வண்டி பழுதுபார்க்கும் இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறினான். பொறித்துறை வினைஞர் அங்கு சென்று, அவர் எல்லாவற்றையும் ஒன்றாகப் பொருத்தி வைத்த பின்னரும் அவரால் அதை இயக்க வைக்க முடியாமற்போயிற்று. அவரால் முடிந்தளவு எல்லாவற்றையும் அவர் அதில் பொருத்தியும் அது இயங்கவில்லை. அவரால் அதை இயங்க வைக்க முடியாமற்போயிற்று. அவர் அப்படியே தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தார். அந்த சிறு பொறித்துறை வினைஞர் நரம்புக் கோளாறுடையவனாய், கட்டிடம் முழுவதும் ஓடிக்கொண்டு, இதையும் அதையும் எடுத்துக் கொண்டிருந்தார். அங்கு நின்று கொண்டிருந்த மனிதனோ, “நான் என்னுடைய காருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு நேரமாகிவிட்டது. உம்மால் அதை இயக்க முடியவில்லையா?'' என்று கேட்டார். அவரோ, “என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்று கூறி, உண்மையிலேயே பதட்டத்துடன் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தார். இவர் பக்கத்தில் நடந்து வந்தார். நல்ல ஆடை அணிந்திருந்த ஒரு பெருந்தன்மையாளர் நடந்து சென்று, அவரை சற்று நேரம் பார்த்து விட்டு, அவர் தன் தலையை சற்று நேரம் அதில் நுழைந்து பார்த்துவிட்டு, அவர் அந்த பொறித்துறை வினைஞரிடம், “நீர் ஏன் இதை தொடக்கூடாது? நீங்கள் அங்கு மின்சாரத்தைப் பெற வில்லையே'' என்றார். எனவே இவன், “நான் அதைக் குறித்து சிந்திக்கவே இல்லை ” என்றார். ஆகையால் அவர் அங்கிருந்த அந்த மற்ற சிறு சாதனத்தை திருகினார். அப்பொழுது அவர் அதற்குள் மின்சாரம் பாய்வதைக் கண்டபோது, கார் இயங்க ஆரம்பித்தது. 65அவர் திரும்பிப் பார்த்து, “ நீர் யார்?'' என்று கேட்டார். அவர் யாராய் இருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? முதன்மையான விசைப்பொறி இயந்திர நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர். அவரே அந்த சாதனத்தை உற்பத்தி செய்தவர். அவரே அதன் இயங்கு முறையை வகுத்தவர். சகோதரனே, இந்த வேளையில் நம்முடைய எழுப்பு தலோடு உள்ள காரியம் என்ன என்று நாம் வியப்படையும் போது, காரியம் என்னவாய் உள்ளது? நாம் சாதனங் களையும், மற்ற ஒவ்வொன்றையும் பெற்றிருக்கிறோம். நாம் இயங்கு சாதனத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனால் இயங்கு சக்தி எங்கே? இயேசு கிறிஸ்துவை காட்சியில் அசைவாட செய்யும்படியாய், நமக்கு தேவையாய் இருப்பது அதுதான். காரியம் என்ன? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இன்றைக்கு பரிசுத்த ஆவி என்றழைக்கப்படுகிற ஒருவர் அந்த இயங்கு சக்தியை தொடக்கூடியவராய் இங்கு இருக்கிறார். அல்லேலூயா! அவரே இயங்கு சாதனத்தின் இயங்கு சக்தியாய் இருக்கிறார். இன்றைக்கு நாம் பெந்தேகோஸ்தேயினராய், தேசத்தில் உள்ள மிகப்பெரிய சபைகளில் ஒன்றாய், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோரை சேர்த்துக் கொள்கிற வர்களுமாய் நிற்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் எங்கே? நாம் அந்நிய பாஷைகளில் பேசுவதன் மூலமாய் அதை ஏற்றுக் கொண்டோம். அது எப்படி கிரியை செய்கிறது என்பதையும் நாம் கண்டோம். மெத்தோடிஸ்டுகள் சத்தமிடுவதன் மூலம் அதை ஏற்றுக் கொள்கின்றனர். லூத்தர் விசுவாசத்தினால் அதை ஏற்றுக் கொண்டார். இந்தவிதமாய் உள்ளனர். அதுவல்ல அது. அது வார்த்தையாயிற்றே. அது திருப்பப்பட்ட வார்த்தையாயும், வெளிச்சம் இயங்கு சாதனங்களின் மீது பிரகாசிக்க அவைகள் இயங்கு சக்திகளாக ஆகின்றன. இயங்கு சக்தியானது, இயங்கு சக்தி இயங்கு சாதனத்தண்டை வருகிற பொழுது அவைகள் இயங்கு சக்திகளாய் இருக்கின்றன. அது பொருளை இயக்கத் துவக்குகிறது. அது உண்மை . வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் மீதுள்ள ஒரு சிறு பொருள் தவறப்பட்டிருக்குமேயானால், அது இயங்காது. பாரமான யாவற்றையும், ஒவ்வொரு கொள்கையையும், ஒவ்வொரு கோட்பாட்டையும் தள்ளி விட்டு, இயங்கு சக்தியான பரிசுத்த ஆவியானவர் இந்நாளின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை நிரூபிக்க வார்த்தையினூடாக பாய்ந்து செல்லட்டும். அப்பொழுது மகத்தான தேவனுடைய சபையானது பீற்றுவளி விசையினால் இயங்கி முன்னோக்கிச் செல்லும் ஆகாய விமானத்தைப் போன்று தன்னுடைய காலூன்றி எழும்பி நின்று, தன்னுடைய எஜமானை சந்திக்க ஆகாயத்திற்கு எழும்பிச் செல்லும். அது முற்றிலும் உண்மை . நாம் அதை செய்கின்றவரையிலும் அது கிரியை செய்யாது. அதுதான் காரியம். ஆம் ஐயா, யார் அதைச் செய்வார்? நாம் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிற இந்நாளில் யார் அதை காத்துக் கொள் வார்? சகோதர னே, நினைவிருக்கட்டும், நினைவிருக்கட்டும். 66இப்பொழுது அது எனக்கு மற்றொரு சிறுகதையைக் குறித்து நினைப்பூட்டுகிறது. கதைகளுக்கு திரும்பிச் செல்வ தல்ல, ஆனால் என் நண்பன் ஒருவன் நியூ மெக்ஸிகோவில் உள்ள கார்ல்ஸ்பாட் (Carlsbad) என்னுமிடத்தில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது நாங்கள் அங்கு கார்ல்ஸ்பாட்டில் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு கூட்ட ஜனங்கள் இந்த குகைக்குள்ளாகச் சென்றிருந்தனர். ஓ, நான் - நான் அந்த விதமான காரியத்தை ஒருபோதும் பார்த்ததில்லை, கீழே அங்கு தரையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் ஆழம் இருந்தது. நான், நான் இங்கு மேலே இருப்பதினால் திருப்தியடைந்துள்ளேன். எனவே அவர்கள் அதனூடாகச் சென்றனர். நானோ உயரே செல்லவே விரும்புகிறேன். கீழே அல்ல. எனவே நான் ...... அவர்கள் இந்த நபரை அங்கே கீழே அழைத்துக் கொண்டு சென்றனர். அவன் ஒரு ஆண் சிநேகிதனாய் இருந்தான். அவனுடைய சிறிய பெண்ணும், சிறிய பையனும் அவர்களோடு இருந்தனர். அவர்கள் ஒரு பெரிய அடித்தளத்திற்குச் சென்றனர். ஓ, பூமியின் மேற்பரப்பிற்கு கீழே அங்கே நூற்றுக்கணக்கான அடிகள், அங்கே கீழே சென்றனர் என்று நான் யூகிக்கிறேன். அப்பொழுது அங்கே மின்சார திருப்பான் அருகே இருந்த ஒரு மனிதன் திடீரென்று அந்த மின்சார திருப்பானை அணைத்து விட்டான். அப்போது அது உங்கள் முகத்திற்கு முன்பாக உள்ள உங்களுடைய கை அசைவைக் கூட நீங்கள் காணமுடியாத அளவிற்கு கருப்பாய் இருண்டு விட்டது. ஒரு சிறு பெண், ஒரு சிறுமி உண்மையில் லேயே பயந்து போய் விட்டாள். உடனே அவள் தன்னுடைய உச்சக்குரலில், “ஓ, இருளாய் உள்ளதே! இருளாய் உள்ளதே! இருட்டாய் உள்ளதே” என்று கூச்சலிடத் துவங்கி, மிகுந்த பய உணர்ச்சியினால் கூச்சலிட்டாள். அவளுடைய சிறிய சகோதரன் அங்கே நிற்க நேர்ந்தது. அவன் அந்த இருட்டிலிருந்து கூச்சலிட்டு, “சிறிய சகோதரியே, பயப்படாதே, விளக்கைப் போடக் கூடிய ஒரு மனிதன் இங்கே இருக்கிறார்” என்று அவன் கூறினான். அல்லேலூயா! சிறிய சபை என்ன செய்யப் போகிறது? கவலைப்படாதீர்கள். இன்றைக்கு விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார். அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகும். ஓ, ஆம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து! 67நினைவிருக்கட்டும், குருடா ...... இயேசுவின் பிறப்பின் நாளில் ஐஸ்வரியவான்கள், அவர்கள் அவரைக் குறித்து வினவிக்கொண்டு, அவர்கள் அங்கே எருசலேமை அடைந்த போது, அவர்கள் எருசலேமின் பளபளப்பான வெளிச்சத் தினால் குருடாக்கப்பட்டு, வெளியே தள்ளப்படவில்லை. அவர்களுடைய வேத சாஸ்திரம்-வேத சாஸ்திரத்தால் அதை விளக்கிக் கூற முடியாமற்போயிற்று. ஆனால் அவர்கள் அதை விட்டுத் திரும்பினபோது, அவர்கள் நித்திய ஜீவ வெளிச்சத்தண்டைக்கு பின் தொடர்ந்து சென்றனர். இன்றைக்கு வர்த்தக புருஷர்களாகிய நீங்கள் இந்த ஸ்தாபனங்களின் பளபளப்பான வெளிச்சத்தை கவனிக்கா தீர்கள். ஆனால் வார்த்தையை பற்றிக் கொள்ளுங்கள். அதுவே உங்களை வெளிச்சத்தண்டைக்கு வழிநடத்துகிறது சிறிய சகோதரியே பயப்படாதே, விளக்குகளை போடக்கூடிய ஒரு மனிதர் இங்கே இருக்கிறார். அப்பொழுது அவர் இருந்ததைப் போன்றே அப்படியே மாறாதவராய், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருக்கிறார் என்று தம்மை நிரூபிக்கவும், அவருடைய வார்த்தையை ஜீவிக்கச் செய்யக் கூடிய கிறிஸ்து இங்கே இருக்கிறார், நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? (சபையோர், “ஆமென்” என்கிறார்கள் - ஆசி.) நாம் எழுந்து நிற்போமாக. 68அடுத்த கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக இன்னும் எனக்கு பதினைந்து நிமிடங்கள் உள்ளன. நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தி, “தேவனே, இக்காலையில் என் மீது வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும். நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். நான் இயங்கு சாதனங்களை விசுவாசிக் கிறேன். கர்த்தாவே இயங்கு சக்தியை எனக்குள்ளாக வையும்” என்று கூற விரும்புகிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்தி, “கர்த்தாவே வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்யும்'' என்று அவரிடம் கதறுங்கள். விளக்குகளை போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார். நாம் பொதுவுடைமைக் கொள்கையில் மரித்துப்போய், எல்லாவிதமான ஸ்தாபன பச்சைக்கிளிகளாலும் தின்று போடப்பட்டிருக்கிறோம். ஆனால் விளக்குகளை போடக்கூடிய ஒரு மனிதன் இங்கே இருக்கிறார். அந்த மனிதர் பரிசுத்த ஆவியானவர். அவர் தாமே இயேசு கிறிஸ்துவை ஆவியில் வெளிப்படுத்தினாரே. கர்த்தராகிய இயேசுவே இந்த ஒவ்வொரு கரங்களையும் தொடும். அவர்களை மட்டுமல்ல, அவர்களுடைய கரத்தினூடாக கீழேயுள்ள இருதயத்தையும் தொட்டு சுவிசேஷ வெளிச்சத்தை பிரகாசியும். இயேசுவின் நாமத்தில்!